நீராவியடிப்பிக்கு மனநிலை பாதிக்கப்பட்டவராம்!!
முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமகா விகாரையின் பௌத்த பிக்குவிற்கு மனநிலை சரியில்லாதவர் என்றும் அவர் தற்போது கொழும்பில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற அதிர்ச்சி தகவலை அமைச்சர் மனோ கணேசன் வெளியிட்டுள்ளார்.
முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இந்த தகவலை தெரிவித்ததாக அவர், சக ஊடகத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
நீராவியடி ஆலய நிர்வாகம் கடந்த வாரம் அமைச்சரை சந்தித்து பேசியபோது, அங்குள்ள பிக்குவிற்கு எதிராக ஆலய நிர்வாகம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், பௌத்த பிக்குவிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டிருக்கவில்லையென்பதை குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து, முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்ட அமைச்சர், பிக்குவின் வாக்குமூலம் பதிவுசெய்யப்படாததன் காரணத்தை வினவியுள்ளார்.
இதன்போதே, மேற்படி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி.
தமிழ் மக்களின் பாரம்பரிய வழிபாட்டிடமான நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு மக்கள் வழிபாட்டிற்கு செல்லும்போது, பௌத்த பிக்கு பலமுறை சன்னதம் ஆடியது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை