சுதந்திரக் கட்சிக்கு பொதுஜன பெரமுன அழைப்பு!!
அரசாங்கத்தை கவிழ்க்கும் வேலைத்திட்டத்துடன் இணைந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் 11ஆம் திகதி சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் இணைந்து கொள்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளில் பெரும்பாலான கொள்கைகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் கொண்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் முக்கிய கொள்கையானது ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான அணியை உருவாக்குவதாகும்.
இந்த கொள்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் இடதுசாரி அணியுடன் இணையுமாறு ஸ்ரீங்கா சுதந்திரக் கட்சியிடம் கோரிக்கை விடுக்கின்றேன் எனவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் மக்கள் மத்தியில் ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்று கொண்டமை தொடர்பாக இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க, அரசாங்கம் முஸ்லிம் மக்களை கவனிப்பதற்கு பதிலாக முஸ்லிம் அமைச்சர்களுக்கு அன்பளிப்புகளையும் சிறப்புரிமைகளையும் வழங்கி வருகிறது என கூறியுள்ளார்.
நாட்டின் இளைய தலைமுறையினரின் எதிர்காலத்திற்காக பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பாதுகாப்பு உறுதிப்படுத்தி முன்னோக்கி செல்லும் பயணத்தில் தலைமைத்துவத்தை வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்துள்ளதாகலும் சீ.பி.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை