பட்டதாரிகளின் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது!

அரச தொழில் நியமனம் வழங்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட வெளிவாரிப் பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுழற்சி முறையிலான சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.


கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் இன்று (புதன்கிழமை) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் உடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

வெளிவாரிப் பட்டதாரிகள் குழுவினர் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனை அவரது அலுவலகத்தில் சந்தித்து தங்களின் போராட்டத்தின் கோரிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.

அதன் பின்னர் பட்டதாரிகளின் கோரிக்கைகள் குறித்து ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், இவ்விடயம் தொடர்பாக அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிபர் மட்டங்களில் தொலைபேசியூடாக கலந்துரையாடி அவர்களின் வெளிப்படுத்தல்களை பட்டதாரிகளுக்குத் தெளிவுபடுத்தினார்.

எனினும் இவ்விடயங்கள் தொடர்பாக பட்டதாரிகளின் சத்தியாக்கிரகம் நடைபெறும் இடத்திற்கு வந்து அனைத்துப் பட்டதாரிகளின் முன்னிலையிலும் தெளிவுபடுத்துமாறு வேண்டுகொள் விடுக்கப்பட்டது.

அதற்கமைய இன்று வெளிவாரிப் பட்டதாரிகளின் சத்தியாக்கிரகப் போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன், பட்டதாரிகளின் கோரிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து தெளிவுபடுத்தினார்.

குறித்த விடயங்களை ஏற்றுக்கொண்ட பட்டதாரிகள், சத்தியாக்கிரகப் போராட்டத்தை தற்காலிகமாக நிறைவுக்கு கொண்டுவந்தனர்.

அரசாங்கத்தினால் 16ஆயிரம் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நியமனங்களில் வெளிவாரிப் பட்டதாரிகள் எவரும் உள்வாங்கப்படாததைக் கண்டித்தும் வெளிவாரிப் பட்டதாரிகளை உள்வாங்கக் கோரியும் மட்டக்களப்பில் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.