முன்னோர்க்கு தர்ப்பணம் செய்யும் ஆடி அமாவாசை நாளில், பின்னோர்க்கு அர்ப்பணிக்கிறோம் பயன்தரு மரங்களை!!📷

ஆடி அமாவாசை தினமான இன்று புதன்கிழமை (31) அகில இலங்கை சைவ மகா சபையினர் கீரிமலை மற்றும் இராவணேஸ்வரம் பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.


கீரிமலையில், குழந்தைவேல் சுவாமிகள் அறப்பணி நிலைய வளாகத்தில் சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் மருத்துவர் ப.நந்தகுமார், மகப்பேற்று மருத்துவ நிபுணர் என்.சரவணபவ மற்றும் பலர் மரக்கன்றுகளை நடுகை செய்தனர்.

பொன்னாலைச் சந்தி தொடக்கம் இராவணேஸ்வரம் வரையான மரம் நடுகைத் திட்டத்திலும் சைவ மகா சபையின் பிரநிதிகள் மரக்கன்றுகளை நாட்டிவைத்தனர்.

முன்னோர்கள் நாட்டிய மரங்களில் இருந்து நாம் தற்போது பயன் பெற்றுக்கொள்வதைப் போல எமது பின்னோர்களின் நலனுக்காக நாம் ஏராளம் மரங்களை நாட்டவேண்டும் என்பதற்காக அமரத்துவமடைந்த தந்தையர்களுக்காக அனுட்டிக்கப்படும் ஆடி அமாவாசை விரத நாளில் மரக்கன்றுகள் நடுகை செய்யும் திட்டத்தை சைவ மகா சபை ஆரம்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.