இந்துக்களை ஒடுக்கும் இனவாதத்தைக் கண்டித்து போராட்டம்!!

இந்து ஆலயங்களில் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பௌத்த மயமாக்கலைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.


இப்போராட்டம் எதிர்வரும் 3ஆம் திகதி காலை 9 மணி தொடக்கம் 10 மணிவரை நல்லை ஆதீனம் முன்பாக இடம்பெறவுள்ளது.

இந்து அமைப்புக்களின் ஒன்றியம் சார்பில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் ஒழுங்கமைப்பில் இந்த போராட்டம் மிக அமைதியான முறையில் இடம்பெறவுள்ளது.

இது குறித்து அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கூறுகையில், “சமீப கால­மாக வடக்கு, கிழக்கு மற்றும் மலை­யகப் பகு­தி­களில் அமைந்­தி­ருக்கும் இந்து ஆல­யங்­க­ளான வெடுக்­கு­நாரி சிவன் ஆலயம், கன்­னியா பிள்­ளையார் ஆலயம், கந்­தப்­பிள்ளை விநா­யகர் ஆலயம் போன்­ற­வையும் திருக்­கே­தீச்­சர ஆலய வளைவு பிற சம­யத்­த­வர்­க­ளால் முறையே அழிக்­கப்­பட்டும் உடைக்­கப்­பட்டும் வரு­கின்றன.

பௌத்­தர்கள் வாழாத பிர­தே­சங்­களில் விகா­ரைகள் அமைப்­பதனூடாக இலங்கை வாழ் இந்­துக்கள் அனை­வரும் அச்­சத்தில் மூழ்­க­ வேண்­டி­ய துர்ப்­பாக்­கிய நிலையை தற்­போது எதிர்­கொண்டு வரு­கின்­றனர்.

இந்த அதர்ம செயல்­க­ளைக்­ கண்­டித்தும் மத நல்­லி­ணக்­கத்தை வலி­யு­றுத்­தியும் எதிர்­வரும் சனிக்­கி­ழமை நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோம­சுந்­தர பிர­மச்­சா­ரிய சுவா­மிகள் தலை­மையில் நல்லை ஆதீன முன்­றிலில் இந்து அமைப்­புகள் ஒன்­றி­யமும் இந்­து­ சமயப் பேர­வையும் இணைந்து அமைதி வழி போராட்டத்தை முன்னெடுக்கின்றது.

இச்செயற்­பாட்டில் அனைத்து இந்து அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள், ஆலய அறங்­கா­ல­வலர்கள், உள்­ளூ­ராட்சி மன்றப் பிர­தி­நி­திகள், ஆர்­வ­லர்கள் மற்றும் பொதுமக்கள் தவ­றாது பங்குகொண்டு இந்துக்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்தி வன்முறையாளர்களின் அத்துமீறல்களை அவர்களுக்கு உணர்த்த முன்வர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.