மலையகத்தில் உழவு இயந்திரம் தடம்புரண்டு விபத்து!!

மலையகத்தில் உழவு இயந்திரம் தடம் புரண்டதில் போபத்தலாவ மெனிக்பாலம மரக்கறி பண்ணையில் பணிபுரிந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இச்சம்பவம் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

போபத்தலாவ மெனிக்பாலம மரக்கறி பண்ணையில் இருந்து 3ஆம் பிரிவு பகுதிக்கு பொருட்களை ஏற்றிச்சென்ற போதே குறித்த உழவு இயந்திரம் பாதையை விட்டு விலகி தடம் புரண்டத்தில் சாரதியும் அதன் சேவையாளரும் பலத்த காயங்களுக்குள்ளாகினர்.

அதன்பின்னர் அக்கரபத்தனை வைத்தியசாலைக்கு குறித்த இருவரையும் கொண்டு செல்லும்போது மேற்படி பணியாளர் உயிரிழந்துள்ளதாகவும் பலத்தகாயங்களுக்குள்ளான சாரதி அக்கரபத்தனை வைத்தியசாலையில் இருந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர், எஸ்.பொடிமாத்தியா (35 வயது) என்ற ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸார் தெரிவித்தனர்

உயிரிழந்தவரின் சடலம் அக்கரபத்தனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு, சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபடவுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாராங்கள் தெரிவித்துள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கரபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.