பாடசாலைகளுக்கு முன்னால் படையினர் ஏன்? அப்பாவிகளின் உயிர்களைப் பறிக்கவா?

நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் பாடசாலைகளுக்கு முன்னால் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவேண்டிய எந்தத் தேவையும் இல்லை.
படையினர் பணியில் ஈபடுத்தப்பட்ட காரணத்தாலேயே காலி அக்மீமன உபானந்த வித்தியாலய மாணவனின் தந்தை அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தீவிரவாதிகளின் தாக்குதல் அபாயம் உள்ள பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டால் பொலிஸாரை அங்கு கடமையில் ஈடுபடுத்த முடியும். அதை விடுத்து பாடசாலைகளின் வாயில்களில் படையினரைக் குவித்துவைத்து மாணவர்களுக்கு அச்சத்தை ஊட்டுவது மட்டுமன்றி இன்று அநியாயமாக ஒரு உயிரும் பலியிடப்பட்டிருக்கின்றது. 

இனியாவது பாடசாலைகளுக்கு முன்னால் உள்ள படையினரை அகற்றுங்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.