ஈராறு ஆண்டுகள் கடந்தும் இன்றும் எமது மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் கப்டன் சுதர்சன்.!!

நிலையுடன் பெயர்: கப்டன் சுதர்சன்.
சொந்தப்பெயர்: ஜீவரட்ணம் ஜீவசுதர்சன்.
வதிவிடமுகவரி: விடத்தல்த்தீவு (மன்னார் மாவட்டம்)
வீரச்சாவுத்திகதி: 05-07-2007.
வீரச்சாவுச்சம்பவம்: மட்டக்களப்புமாவட்டத்தில் சிறிலங்காஇராணுவத்தினருடனான நேரடிமோதலின்போது வீரச்சாவைத்தழுவிக்கொண்டார்.

 சுதர்சன்அவர்கள் நீண்டகாலமாக மன்னார்மாவட்டத்தின் கடற்புலிகளின் அரசியல்த்துறையில் பணியாளராக கடமையாற்றிக்கொண்டிருந்தார். அதாவது கடற்புலிகளின் மன்னார்மாவட்டஅரசியல்த்துறையின் நிதி மற்றும் நிர்வாகச்செயற்பாடுகளோடு மாவீரர்பணிமனைக்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துக்கொண்டிருந்தார். முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம் கடற்புலிகளின் ஆளுகைக்குட்பட்டிருந்தபடியால் முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தின் வளர்ச்சியிலும் சுதர்சன்அவர்களின் காத்திரமான பங்களிப்பு அமைந்திருந்தது. பணியாளராகச்செயற்பட்டபோதிலும் முழுநேரமாக செயலகத்தை மையப்படுத்தியே அவரது செயற்பாடுகள் அமைந்திருந்தன. 2001-ம்ஆண்டின் நடுப்பகுதியில் சுதர்சன்அவர்கள் தன்னை முழுநேரப்போராளியாக இணைத்துக்கொண்டு விடுதலைப்புலிகளின் கடற்புலிகளில் உறுப்பினரானார். இவ்வாறு தன்னை போராளியாக இணைத்துக்கொண்டும் மன்னார்மாவட்ட அரசியல்த்துறையில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டிருந்தார். இதையடுத்து 2002-ம்ஆண்டின் முற்பகுதியில் நோர்வேஅரசின் அனுசரணையில் இலங்கைஅரசிற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான சமாதானஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததையடுத்து சுதர்சன் அவர்கள் தமிழீழ கடற்புலிகளின் மாவீரர்பணிமனைப்பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அத்தோடு கடற்புலிகளின் அரசியல்த்துறைச்செயலகங்களின் நிதிநடவடிக்கைகளான பணியாளர்களின் கொடுப்பனவுப்பட்டியல்கள் பதிவுசெய்து பணியாளர்களுக்கான கொடுப்பனவுகள் சீரானமுறையில் வழங்குவதுவரையிலும் தனது பணிகளைச்செவ்வனேசெய்தார். அத்தோடு கடற்புலிகளின் ஆளுகைக்குட்பட்டிருந்த முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம் அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் மற்றமு் உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம் ஆகியவற்றின் வளர்ச்சியில் அதாவது சமாதானகாலப்பகுதியில் அவரது செயற்பாடுகளை குறிப்பிட்டுச்சொல்லலாம். அத்தோடு சமாதானகாலப்பகுதியில் யாழ்குடாநாட்டில் எமது அரசியல்ச்செயலகங்கள் திறக்கப்பட்டு அங்கும் எமது அரசியல்ப்பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது அங்கும் குறிப்பாக வடமராட்சிவடக்கு வலிகாமத்தின் ஒருபகுதி மற்றும் தீவகம் ஆகிய இடங்களிலும் சுதர்சன்அவர்களின் செயற்பாடுகள் விரிவாக்கப்பட்டிருந்தன.

 குறிப்பாக 2003-ம்ஆண்டில் நான் வடமராட்சிக்கிழக்கில் அரசியல்ப்பணியை முன்னெடுத்துக்கொண்டிருந்த காலப்பகுதியிலும் 2004-ம்ஆண்டில் அளம்பில்ப்பிரதேச அரசியல்த்துறைப்பொறுப்பாளராக நான் செயற்பட்டுக்கொண்டிருந்த காலப்பகுதியிலும் நான் பல்வேறு நெருக்கடிகளைச்சந்தித்தசந்தர்ப்பங்களிலெல்லாம் சுதர்சண்ணர் எனக்கு பலவழிகளிலும் உதவியாகவும் ஒத்தாசையாகவும் இருந்தார். இவற்றுக்கு அப்பால் தனிப்பட்டமுறையிலும் அவருடன் எனக்கு நட்புறவு இருந்தது. 2004-ம்ஆண்டின் இறுதிப்பகுதியில் சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டதையடுத்து சுனாமி மீள்கட்டுமானப்பணிகளுக்காக போராளிகள் களத்தில் இறங்கிச்செயற்பட்டபோது சுதர்சன்அவர்கள் 2005-ம்ஆண்டு ஜனவரிமாதத்தில் வடமராட்சிக்கிழக்குப்பிரதேசத்திற்கு சுனாமி மீள்கட்டுமானப்பணிகளுக்காக கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சசூசைஅவர்களின் பணிப்புரைக்கமைவாக அங்கு சென்று சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமானப்பணிகளையும் சுனாமி மீள்கட்டுமானப்பணிகளையும் மேற்கொண்டிருந்தார். ஆனாலும் இரண்டு அல்லது மூன்றுவாரங்கள்தான் அந்தப்பணியைச்செய்திருப்பார். மீண்டும் சிறப்புத்தளபதி சூசைஅவர்கள் சுதர்சன்அவர்களை அழைத்து மிகவும் முக்கியமான பணி ஒன்றை சுதர்சன்அவர்களுக்கு வழங்கியிருந்தார். அதாவது அன்றையநாட்களில் சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து கடற்தொழிலாளர்களுக்கும் இலவசமாக மீன்பிடிப்படகுகளை உற்பத்திசெய்துகொடுப்பதற்கான நிதியுதவியினை வழங்குவதற்கு மல்ற்ரி மரேன் சேவிர்ஸ் என்ற நிறுவனம் முன்வந்தது. இதை செயற்படுத்தும் பொறுப்பை கடற்புலிகள் ஏற்றுக்கொண்டனர். இந்தப்பணி கடற்புலிகளின் மகளீரணியில் ஒரு அங்கமான மங்கை படகு கட்டுமானப்பிரிவினரிடம் ஒப்புவிக்கப்பட்டது. இதற்கமைவாக வடமராட்சிக்கிழக்கு மற்றும் முல்லைத்தீவுப்பகுதிகளில் படகுக்கட்டுமானத்தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு படகுகள் உற்பத்திசெய்யப்பட்டுக்கொண்டிருந்தன. கிழக்குமாகாணத்தில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களும் சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் வெகுவாகப்பாதித்திருந்தது. இதனைக்கருத்திற்கொண்டு மட்டக்களப்புமாவட்டத்திலும் ஒரு படகுக்கட்டுமானத்தொழிற்சாலையை நிறுவுவதற்காக மங்கை படகுக்கட்டுமானப்பிரிவைச்சேர்ந்த மகளீர்போராளிகள் குழுவொன்று மட்டக்களப்பிற்குச்செல்வதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தது. இந்தக்குழுவுடன் சுதர்சன்அவர்களும் சிறப்புத்தளபதி சூசைஅவர்களின் பரிந்துரைக்கு அமைவாக இணைக்கப்பட்டார். சுதர்சன்அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியானது அதாவது இந்த படகு உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் போராளிகளுக்குத்தேவையான படகு உற்பத்திப்பொருட்களையும் இதரபொருட்களையும் கொள்வனவுசெய்து கொடுப்பதோடு இந்த மட்டக்களப்பு படகு உற்பத்தித்தொழிற்சாலையின் ஏனையவெளிவேலைகளையும் ஒருங்கிணைத்துக்கொடுப்பதுவாகும். 2005-ம்ஆண்டு பெப்ரவரிமாதத்தில் சுதர்சன் உள்ளிட்ட இந்தக்குழுவினர் மட்டக்களப்பிற்குச்சென்றனர். அதன்பிற்பாடு இரண்டு அல்லது மூன்றுதடவைகள் சிறப்புத்தளபதி சூசைஅவர்களைச்சந்திப்பதற்காக சுதர்சன் முல்லைத்தீவிற்கு வநதிருந்தார். அவ்வாறு வந்தபோதெல்லாம் நான் அவரைச்சந்தித்திருக்கின்றேன். இறுதியாக 2005-ம்ஆண்டு யூலைமாதத்தின்முற்பகுதியில் அதாவது கரும்புலிகள்நாளை அண்மித்தநாட்களில் பணிநிமிர்த்தமாக வன்னிக்கு வந்திருந்தார். அப்போதும் அவரைச்சந்தித்திருக்கின்றேன். பின்னர் அவர் மட்டக்களப்பிற்குச்சென்றுவிட்டார். அதன்பிற்பாடு அவர் வன்னிக்கு வரவில்லை. இதன்பிற்பாடு 2006-ம்ஆண்டு நடுப்பகுதியில் மீண்டும் சிறிலங்காஇராணுவத்தினருடன் யுத்தம்மூண்டு கிழக்குமாகாணத்தை அரசபடையினர் கட்டம்கட்டமாக ஆக்கிரமித்துக்கொண்டதையடுத்து கிழக்குமாகாணத்தில் நிலைகொண்டிருந்த போராளிகள் கட்டம்கட்டமாக கடல்வழியாக வன்னிக்கு நகர்த்தப்பட்டுக்கொண்டிருந்தபொழுதெல்லாம் எஙகள் சுதர்சண்ணாயவும் வருவார் என நான் பல கற்பனைகள் செய்துகொண்டிருந்தேன். ஆனாலும் அதற்கு மாறாக அவரது வீரச்சாவுச்செய்திதான் என்னை வந்தடைந்தது. ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் வரிசையில் சுதர்சன்அவர்களும் கப்டன் சுதர்சனாக எமது இதயங்களில் அவர் வாழ்ந்துகொண்டிருக்கின்றார். இன்று அவர் எம்மைவிட்டுப்பிரிந்து  ஆண்டுகள் கடந்தாலும் அவரது நினைவுகளோடு எமது விடுதலைப்பயணத்தை தொடர்வோமாக............

 "தமிழரின்தாகம் தமிழீழத்தாயகம்."

நினைவுப்பகிர்வு:
கொற்றவன்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 

No comments

Powered by Blogger.