வீழ்வது நாமாயினும் விடுதலை விருட்சமாகுமென!!!

இரவுகளைப் பாசத்துடன் சுமந்தோம்
இரவுகளே நமது தோழர்
நமது வழி யெங்கும் இரவுகளே பேசும்

இரவுகளைச் சுடராக்க காத்திருந்தோம்
அண்ணனின் ஆணைக்காய் தவமானோம்

நிசிகளில் வானத்து ரிசிகளை அளந்த
வேட்கையானோம்
தாயகக் கனவினை வரையத்துதித்தோம்

ஆழ்கடல் மடியிலும்
ஆ வுறங்கா கானத்திலும்
நாமுறைந்தோம்
விடிவினைத் தேடியே தினமெரிந்தோம்

ஒரு சொட்டுக் கண்ணீரோ
ஓராயிரம் வலிகளோ வாட்டியதில்லை நம்மை
வானமும் பூமியும் ஒறெனக் கொண்டோம்
சாவும் வாழ்வும் வாழ்வெனவானோம்
விடுதலை ஒன்றே மூச்சென நிமிர்ந்தோம்

கானப் பட்சிகளும் கண்ணுறங்கிய
போதும்
வேங்கைகள் கண்கள் தூங்கியதில்லை நாளும்

ஈழ இறைவனின் பிள்ளை நாமெல்லோரும்
நாயக ஆணைக்காய்
காத்திருந்தோம்
காத்திருக்கிறோம்
காத்திருப்போம்

வீழ்வது நாமாயினும்
விடுதலை விருட்சமாகுமென

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.