கனவாகிப்போன என் தேசத்தின் கடைசி ஆயுதமோ?

கனவாகிப்போன என் தேசத்தின்
கடைசி ஆயுதமோ? இது
வற்றி வரண்ட நிலத்தில்
கழன்ற பட்டியுடன்
கறள் ஏறியும் ஏறாது
கிடக்கும் இந்த துப்பாக்கி
தாங்கிய என் வீரன் எங்கே?
நந்திக்கடல் நாணல்களே
பதில் சொல்லுங்கள்!
இன்று வற்றிப்போனாலும்
அன்று வற்றாது நின்ற
நந்திக்கரையோரம்
தலைசாய்த்து நின்ற
நாணல்களே!
உங்களுக்கு மட்டுமே
உண்மைகள் தெரியும்
நலன்பட நவிலுங்கள்....!

No comments

Powered by Blogger.