யேர்மனி பேர்லின் தமிழ் மகளிர் அமைப்பினால் வவுனியா மாணவிக்கு வாழ்வாதார உதவி!!📷

காணாமல் ஆக்கப்பட்ட தனது பிள்ளை யைத்தேடியலையும் வவுனியா வடக்கு குளவி சுட்டான் வேலங்குளத்தில் சிறுகடை யொன்றை நடாத்திவரும் 
தாயார் ஒருவரி னால் பராமரிக்கப்பட்டுவரும் தாய் தந்தையில்லாத  மாணவிக்கு(தரம்-9 நெடுங்கேணி ம.வியில் கல்விகற்கும்) பேர்லின் ஜேர்மனைத்தளமாக கொண்டியங்கும் தமிழ் மகளிர் அமைப்பின் நிதி உதவியுடன் துவிச்சக்கர வண்டி யொன்றினை இன்று வழங்கினோம்.
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடியலையும் இந்த தாயின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு இவரால் நடாத்தப்பட்டு வரும் சிறு கடைக்கான விற்பனைப்பொருட்களை பல்கலைத்தம்பி தம்பன் அவர்கள் மூலம் வழங்கியபோதே குறித்த தாயாரினால் இவ்வுதவி கோரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.