அறக்கொடையாளர் பரமேஸ்வரி துவிச்சக்கரவண்டிகள் வழங்கினார்!!📷

காரைநகர் முல்லைப்பிலவைச் சேர்ந்த தர்மராசா பரமேஸ்வரி காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி மாணவர்கள் இருவருக்கு துவிச்சக்கரவண்டிகளை அன்பளிப்பாக வழங்கியிருக்கின்றார்.


அறக்கொடையாளர் அன்னை பரமேஸ்வரி உயிர்க்கொடையாளர் நாளான இன்று (ஜீலை-05) செய்த இவ்வுதவி அவரை முன்முதாரணம் மிக்கவராக மாற்றியிருக்கின்றது.

72 வயதான பரமேஸ்வரி அம்மா, இதேபோன்று பல சேவைகளை மேற்கொண்டு வருகின்றார். ஏற்கனவே, கடந்த வருடமும் ஒரு மாணவனுக்கு துவிச்சக்கரவண்டியொன்றை வழங்கிருக்கின்றார்.

தமக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்களைக்கூட கஷ்ட நிலையில் உள்ளவர்களுக்கு பகிர்ந்தளித்து வருகின்றார். தமது பிரதேசத்தில் உள்ள பல மாணவர்களின் கல்விக்கு இவர் உதவி வருகின்றார்.

விளையாட்டுக்கழக இளைஞர்களை ஊக்குவித்து அவர்களுக்கும் இந்த அன்னை உதவிகளைச் செய்து வருகின்றார்.

இன்றைய துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் செயற்பாடு சமூக சேவையாளரும் முன்னாள் காரைநகர் பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரும் தற்போது ஊர்காவற்றுறை பிரதேச செயலக உத்தியோகத்தருமான பாஸ்கரகுருவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. 

காரைநகர் ஜே-46 கிராம சேவையாளர் அலுவலகத்தில் எளிமையாக இடம்பெற்ற இவ்வைபவத்தில் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் ப.நந்தகுமார், கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

அன்னை பரமேஸ்வரி மேலும் பல்லாண்டு காலம் வாழவேண்டும் என இறைவனை வேண்டுகின்றோம்.

No comments

Powered by Blogger.