முப்பொழுதும் என் விழிகளில் உன் கனவே..!!

இலைமறைவாய் மறைந்திருக்கும்
மதிமுக மறைதலில்
அமுதுமுண்டு..
தீதுமுண்டு...
மூடிவிட்ட திரைகளில்
மூச்சுமுட்டும் நேசமுண்டு...

அனல்தாரகையாய்
அவதரித்து அல்லல் மொழிகளில்
அலைக்கழித்தாலும்
மையத்துள் மாயமாய்
குவியும் என்னுள்
அடுக்கிய நேசத்தில்
குளிரென நீயும்
தனலென நானும்...

புரிந்திடுவாய் குளிர் நிலவே
முப்பொழுதும் என் விழிகளில்
உன் கனவே..!!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.