பிரான்சு தமிழர் விளையாட்டு விழாவை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு புறக்கணிக்கின்றது!📋


தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டத்தின் விடுதலை அரச விரிவாக்கத்தில் அரசார்பற்ற மனித நேய அமைப்பாகத் தமிழீழ தேசிய தலைவரால் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் உருவாக்கம் பெற்றது.
சர்வதேச நாடுகளில் அமைந்திருந்த தமிழர் புனர்வாழ்வுக்கிளைகளும் அந்தந்த நாடுகளில் அமைந்திருந்த தமிழர் ஒருங்கிணைப்புக்குழுக்களும், அதனையொத்த கட்டமைப்புகளும் இணைந்து செயல்பாடுகளை முன்னெடுத்து வந்தன. புலம்பெயர் மண்ணில் அந்நிய காலச்சார அழுத்தங்களுக்குள் மூழ்கிவிடாது எமது பண்பாட்டு கலாசார உணவுப்பழகக் வழக்கங்கள் மற்றும், பாரம்பரிய எமது விளையாட்டுக்கள் என்பவறற பிற சமூகங்களுக்கும, எமது சந்ததியினருக்கும் அறிமுகப்படுத்துவதோடு, ஒருநாள் ஒன்று கூடி உண்டு மகிழ தமிழர் விளையாட்டு விழா 1998ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக அனைத்துத்தமிழ் மக்களும், கட்டமைப்புகளும் ஒருங்கிணைந்து இவ்விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைபபு வழங்கினர். 2009 வரை ஒருநாட்டுக்குரிய அனைத்துக் கட்டமைப்புகளுடன் இருந்து சிறீலங்கா அரசுடன் போராடிய சூழ்நிலையில் பயங்கரவாத முலாம் பூசப்பட்டு பேரின அழிப்புக்குள்ளாக்கப்பட்டதால் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு சனநாயக வழிப்போராட்டமாக மாற்றம் பெற்றது. இக்கால மாற்றுவெளியில் பல தன்னிச்சையாக கட்டமைப்புக்கள் உருவாக்கம் பெற்றன. இந்த உருவாக்கத்திற்குள் பிரான்சு தமிழர் புனர்வாழ்வுக்கழகம் தன்னிச்சையாக உருவாக்கம் கண்ட கட்டமைப்புகளுக்குள் உள்வாங்கப்பட்டு விட்டது. இதனை ஒழுங்கு செய்யும் நடவடிக்கையில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் புனர்வாழ்வுக்கழக நடவடிக்கைகளில் இணைந்து செயற்படுவதில்லை என்று ( புனர்வாழ்வுக்கழக நடவடிக்கைகளளை புறக்கணிப்பதாக) அறிக்கை விடப்பட்டது தெரிந்ததே. கடந்த மூன்று ஆண்டுகளாக அதன் அடிப்படையில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்சின் செயற்பாடுகளை முற்றாகப் புறக்கணித்தது. 2014 ஆரம்பத்தில் தமிழ்மக்களுடைய நலன்கருதியும் தேவைகருதியும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், தமிழர் புனர்வாழ்வுக்கழகமும் சந்திப்புக்களை ஏற்படுத்தி 2009 க்கு முன்னர் எவ்வாறு நடைமுறையில் இருந்ததோ அதே நடைமுறையை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஏற்றுக் கொள்வதாக அனைத்துல தொடர்பகப் பொறுப்பாளர் முன்னிலையில் நடைபெற்ற சந்திப்பில் உறுதிமொழி தந்து பலசந்திப்புகளில் தெளிவுபடுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நல்லெண்ண ரீதியாக சலங்கை நிகழ்வுக்கும், தமிழர் விளையாட்டு விழாவிற்கான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டிக்கும், தனது ஆதரவை நல்கியிருந்தது. ஆனால் யூன் 21ம் நாள் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட தமிழர் விளையாட்டு விழாவுக்கான இறுதிப் பொதுக்கூட்டத்தில் மீண்டும் கடந்த ஆண்டு ( 2013 ) நடாத்திய நடைமுறைகளேயே அக் கூட்டத்தில் வழங்கப்பட்ட விளையாட்டு ஒழுங்கமைப்பாளர் அட்டவணையில் முன்வைத்திருந்தது. இது எங்களுடன் இணைந்து எடுக்கப்;பட்ட முடிவுகளுக்கு மாறாகவும,; எமது நல்லிணக்கத்தைப் புறந்தள்ளியும,; தமது தன்னிச்சையான செயற்பாட்டை முன்னெடுப்பதாகவும் அமைந்திருந்தது. அதன் பிரதிபலன்கள் எம்மினத்திற்கு நன்மை அளிக்காது என்னும் பட்சத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தனது வெளிநடப்பைச் செய்தது. இதன் அடிப்படையில் 2011 ல் எம்மால் விடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் நாம் தொடர்ச்சியாக பிரான்சு தமிழர் புனர்வாழ்வுக்கழக நிர்வாகத்தின் செயற்பாடுகளை புறக்கணிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம். தமிழர் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்சின் மேற்குறித்த நடவடிக்கையானது தொடர்ந்து எமது தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் எண்ணங்களுக்கு மாறானதாக அமைந்திருக்கின்றது, என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவதுடன் இதற்கான மாற்றத்தை பிரான்சு வாழ் தமிழீழ மக்களே தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள் என்பதை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தெரிவித்துக்கொள்கின்றது.                                                             நன்றி “ தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் ’’ தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.