பாவத்தைத் தேடும் பணம்!!
வீராப்பாய் பேசும் வார்த்தைகளில்
பூசிமெழுகிய சாயத்தின் வர்ணம்
ஆசையை தூண்டி
அடிமை அரசியலின்
பளபளப்பில் சிலிர்த்துப்போய்
நிற்கிறது!
தூரப்பறக்க முடியா சிறகுகளில்
தொங்கியபடி மின்மினிப்பூச்சிகள்
வானத்தை தொட்டுவிட நினைக்கிறது!
தமிழ்த்தாயைத் கொன்று புதைத்த
போதிமரத்தின் கொடியியினை
சேய்களின் கரங்கள் தூக்கிப்பிடித்து
நக்கிப்பிழைக்கும்
வெக்கித்த பிழைப்பில்
வீரசாதனைகள்
நிகழ்கின்றன!
பிணங்களை கடந்த
கொடிய நினைவுகளை துறத்து
பணங்களை விழுங்கும்
பாம்புகளின் நஞ்சுகள்
நாகிலேறி
நானிலமும்
பாதம் கழுவும்
பரிதாபம்
தொடர்கிறது!
வாளேந்திய மிருகங்களின்
வேட்டையில் குடும்பத்தை
இழந்த வலிகளின் வதைப்பில்
அப்பாவித் தமிழனின்
வாழ்க்கை
நடக்குது!
திருந்தாத ஜென்மங்கள்
இருந்தென்ன இலாபமென்று
மானத்தமிழனின்
மார்பு
நெருப்பில் உருகி
வேகுது!
ஈழத்தில் நாம் பிறந்த மண்ணும்
வளர்ந்த மண்ணும்
இத்தனை தூரோகங்களுக்கும்
விதிவிலக்கல்லவென
நினைக்கும் போது
நெஞ்சம் நிலைகுலைந்து
போகுது!
✍தூயவன்
பூசிமெழுகிய சாயத்தின் வர்ணம்
ஆசையை தூண்டி
அடிமை அரசியலின்
பளபளப்பில் சிலிர்த்துப்போய்
நிற்கிறது!
தூரப்பறக்க முடியா சிறகுகளில்
தொங்கியபடி மின்மினிப்பூச்சிகள்
வானத்தை தொட்டுவிட நினைக்கிறது!
தமிழ்த்தாயைத் கொன்று புதைத்த
போதிமரத்தின் கொடியியினை
சேய்களின் கரங்கள் தூக்கிப்பிடித்து
நக்கிப்பிழைக்கும்
வெக்கித்த பிழைப்பில்
வீரசாதனைகள்
நிகழ்கின்றன!
பிணங்களை கடந்த
கொடிய நினைவுகளை துறத்து
பணங்களை விழுங்கும்
பாம்புகளின் நஞ்சுகள்
நாகிலேறி
நானிலமும்
பாதம் கழுவும்
பரிதாபம்
தொடர்கிறது!
வாளேந்திய மிருகங்களின்
வேட்டையில் குடும்பத்தை
இழந்த வலிகளின் வதைப்பில்
அப்பாவித் தமிழனின்
வாழ்க்கை
நடக்குது!
திருந்தாத ஜென்மங்கள்
இருந்தென்ன இலாபமென்று
மானத்தமிழனின்
மார்பு
நெருப்பில் உருகி
வேகுது!
ஈழத்தில் நாம் பிறந்த மண்ணும்
வளர்ந்த மண்ணும்
இத்தனை தூரோகங்களுக்கும்
விதிவிலக்கல்லவென
நினைக்கும் போது
நெஞ்சம் நிலைகுலைந்து
போகுது!
✍தூயவன்
கருத்துகள் இல்லை