தாய்மையைக் கொண்டாடும் சமீரா!!

சமீரா ரெட்டி ஒன்பது மாத கருவைத் தாங்கியுள்ள நிலையில் தண்ணீருக்கு அடியில் ஒரு போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார். வாரணம் ஆயிரம், சேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்த சமீரா ரெட்டி பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார். 2014ஆம் ஆண்டு ஆகாஷை வர்தே என்பவரை திருமணம் முடித்த பின் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
தற்போது இரண்டாம் முறையாக கருவுற்றுள்ள சமீரா நீச்சல் குளம் ஒன்றில் தண்ணீருக்கு அடியில் பல்வேறு வண்ண உடைகளில் புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் ஒவ்வொரு படத்திற்கும் சில வரிகளை மேற்கோள் காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.