பிக் பாஸ்: கைதாவாரா வனிதா?
சொந்த மகளையே கடத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வனிதா விஜயகுமாரை கைது செய்ய தெலங்கானா போலீஸ் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது.
நடிகர் ஆகாஷுடன் ஏற்பட்ட மண முறிவைத் தொடர்ந்து, இரண்டாவதாக தெலங்கானாவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை கரம் பிடித்தார் வனிதா. 2007ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது, கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2012ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இவர்களது 8 வயது மகள் ஜோவிகா, தந்தை ஆனந்துடன் தெலங்கானாவில் வசித்து வந்தார். இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் மகள் ஜோவிகாவை, சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார் வனிதா. ஆனால் தனது மகளை வனிதா கடத்திச் சென்றுவிட்டதாக, தெலங்கானா போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார் ராஜன் ஆனந்த். இதை ஏற்றுக் கொண்ட போலீஸார் வனிதா மீது ஆள் கடத்தல் வழக்குப் பதிவு செய்தனர்.
சென்னையில் அவருக்கு நிரந்தர முகவரி இல்லாததால் அவரைத் தேடி கண்டறிந்து கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு வருகிறார். சென்னை பூந்தமல்லியில் அரங்கு அமைக்கப்பட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. அவரது மகள் தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.
இந்நிலையில் நசரேத் பேட்டை போலீஸின் உதவியை நாடியுள்ள தெலங்கானா போலீஸ் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வனிதாவிடம் விசாரணை மேற்கொள்ள முயற்சித்து வருகிறது.

.jpeg
)





கருத்துகள் இல்லை