அடுத்த ஜேம்ஸ் பாண்ட்?

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் டேனியல் கிரேக் நடிக்கும் ‘பாண்ட் 25’ படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யாரென்ற விவாதம் தொடங்கியுள்ளது.

1952 ஆம் ஆண்டு அயன் ஃபிளமிங்க் என்ற எழுத்தாளரால் உருவாக்கப்பட்ட கற்பனையான கதாபாத்திரம் தான் ஜேம்ஸ் பாண்ட். இவர் பிரிட்டிஷின் ரகசிய சேவையின் உறுப்பினர் ஆவார். உளவாளியான இவரது கதாபாத்திரம் 007என்ற குறியீட்டு எண்ணுடன் அழைக்கப்படுகிறது. இத்திரைப்படத் தொடர் 1962 ஆம் ஆண்டு நடிகர் சியான் கானரி நடித்த டாக்டர் நோ என்பதில் தொடங்கி 2015 ஆம் ஆண்டு நடிகர் டேனியல் கிரெய்க் நடித்த ஸ்பெக்டர் திரைப்படம் வரை மொத்தம் இருபத்திநான்கு திரைப்படங்களாகும்.
இதுவரை ஆறு நடிகர்கள் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளனர். சியான் கானரி, ஜார்ஜ் லேசன்பி, ரோஜர் மூர், திமோத்தி டால்ட்டன், பியர்ஸ் பிராஸ்னன், டேனியல் கிரெய்க் ஆகியோர் பாண்டாக நடித்துள்ளனர். கடைசி நான்கு படங்களில் நடித்த டேனியல் கிரேக் ஐந்தாவது முறையாக தற்போது நடித்து வரும் ‘பாண்ட் 25’ படத்தின் மூலம் தனது ஒப்பந்தத்தை நிறைவு செய்யவுள்ளார்.
இதனால், அடுத்து வெளியாகும் ஜேம்ஸ் பாண்ட் படத்தை விட, அடுத்த ஜேம்ஸ் பாண்டாக நடிப்பது யாரென்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த நிலையில், அடுத்த ஜேம்ஸ் பாண்டாக ரிச்சர்ட் மேடன் நடிக்க அதிகவாய்பிருப்பதாக ஹாலிவுட் மீடியாக்கள் கணித்துள்ளன. டாம் ஹார்டி, டாம் ஹிட்டல்டன், ஜேம்ஸ் நார்டன் போன்ற முன்னணி நடிகர்களை விட இவர் தான் அடுத்த ஜேம்ஸ் பாண்டாக அதிக வாய்புள்ளதாக ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் பிரபல எச்.பி.ஓ சேனலில் தொடராக வந்த கேம் ஆஃப் த்ரோன்ஸில் ராப் ஸ்டார்க் கதாபாத்திரத்தில் நடித்தவர்.
அடுத்த சூப்பர் ஸ்டார் போல, அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யாரென்பது ஒவ்வொரு முறையும் சுவாரஸ்யமான விவாதமாகவே இருந்து வருகிறது. அடுத்த பாண்ட் யாராக இருந்தால் சரியாக இருக்கும் என்ற கேள்வி, இப்போதைய ஜேம்ஸ் பாண்ட் நடிகரான டேனியல் கிரேக்கிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டிருக்கிறது. பாண்ட் யாரைக் கைகாட்டினார் தெரியுமா? ராபர்ட் பேட்டின்ஸன்.
சில நாட்களுக்கு முன், அடுத்த பேட்மேனாக நடிக்கத் தேர்வான இவரைத் தான் பேட்மென் ரசிகர்கள் நிராகரித்து வார்னர் பிரதர்ஸ்க்கு கடிதம் எழுதி கையொப்பமிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.