தமிழ் தேசியத்தில் விருப்பம் கொண்டவர்களுக்கு..!!
குடும்ப கட்சியினை வளர்த்தெடுப்பதற்கு கஜேந்திரகுமார் செய்யும் கடும் பிரயத்தனத்தையும், புலமையாளர்களை உள்வாங்கினால் தங்களின் தலைமைத்துவங்களுக்கு பிரச்சனை வந்து விடுமோ என்ற கஜேந்திரனின் சிந்தனையையும்,
வெறும் கொள்கை என்ற கோசத்தால் மறைத்துவிட முடியும் என்ற கஜேந்திரர்களின் சிந்தனை அறிவிலித்தனமானது. இவர்கள் சிந்திப்பது போல் 65000 மாவீரர்களின் தியாகத்தால் கட்டி எழுப்பப்பட்ட தமிழ் தேசியம் தங்களின் சொத்துரிமை போலவும், தங்களை விட ஆளுமை மிக்கவர்களும், தமிழ் தேசியத்தில் உறுதியானவர்களும் இல்லை என நினைப்பதும் மடத்தனமானது.
மற்ற கட்சிகளுடன் சேர்வதற்கு கொள்கை பிரச்சனையை காரணமாக சொல்லலாம், ஆனால் காங்கிரசை தூக்கி வீசி விட்டு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பதிந்து, அதை முன்னிலைப்படுத்தி மக்கள் அனைவரையும் சேர்த்து அரசியல் செய்வதில் கஜேந்திரர்களுக்கு என்ன பிரச்சனை என யாரும் விளக்க முடியுமா!!!???
இவர்களுக்கு தங்கள் தலைமைத்துவத்தை தக்க வைப்பதற்கான அரசியல் தேவைப்படுகின்றதே தவிர, தமிழ் தேசிய அரசியல் அல்ல.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகத்தை விட,
குடும்ப கட்சியினை வளர்ப்பதற்காகவும், தலைமைத்துவ வெறியிலும், சரியான ஒரு தமிழ் தேசிய அரசியலை கட்டி வளர்க்காமல் காலம் கடத்தி வருகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலையையும் துரோக அரசியல் வரிசையிலேயே வரலாற்றில் பதிவு செய்யப்படும்.......
முன்னணியில் அரசியல் செய்யக்கூடிய அறிவார்ந்த, மக்களின் நாடிகளை பிடிக்ககூடிய, முற்போக்கான சிந்தனையுள்ளவர்கள் இல்லை,
அதனால் இவர்கள் விமர்சிக்கும் காட்டுமிராண்டி அரசியலை செய்ய தெரியுமேயொழிய, அரசியல் செய்ய தெரியாது.
கடந்த 10 ஆண்டுகளில் இவர்கள் செய்தது என்ன என்று கேட்டால் விமர்சன அரசியல் மட்டும் தான்,
விமர்சன அரசியல் தேவையானது மக்களை சிந்திக்க வைக்கும், ஆனால் மக்கள் பின் தொடர மாட்டார்கள், ஒருவர் செய்யும் அரசியலை பார்த்தே மக்கள் பின் தொடர்வார்கள்.
இவர்கள் செய்யும் விமர்சன அரசியலை பார்த்து மக்கள் பின்னால் வருவார்கள் என்ற கணக்கு அறிவிலித்தனமானது என்பதை விரைவில் விளங்கி கொள்வார்கள்.
உண்மையான மக்களில், தேசியத்தில் அக்கறை கொண்டவர்களின் பின்னூட்டங்களை மறுதலித்து செயற்படும் முன்னணியினர் கரையத்தொடங்கிய பின்னர் ஓடி முளித்து பிரயோசனம் ஒன்றும் இருக்கப்போவதில்லை.
“உயிர்க்கொடை என்பது கொடைகளில் மிக உயர்ந்தகொடை. சாதாரண மனிதர்களால் அதை நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது. எமது இனத்திற்காகத் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்தவர்களை நாம் எந்தக் காலத்திலும் மறத்தலாகாது. எமது நன்மைக்காக உயிர் நீத்த உத்தமர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று அனைத்துத்தரப்பினரிடமும் நான் உரிமையயுடன் வேண்டிநிற்கின்றேன்” -க.வி.விக்னேஸ்வரன்

கருத்துகள் இல்லை