விரைவில் விண்வெளியில் காய்கறித்தோட்டம்!

விண்வெளியில் விரைவில் தோட்டம் ஒன்றை அமைத்து, ஆராய்ச்சியாளர்கள் காய்கறிகளையும், பழங்களையும் வளர்க்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுவரை ஆராய்ச்சியாளர்கள் முன்பே தயாரிக்கப்பட்ட உணவை மாத்திரமே விண்வெளிப் பயணங்களில் உண்டு வந்தனர்.

அவ்வப்போது, அவர்களின் பயணத்திற்கு இடையே பூமியிலிருந்து தோட்டத்தில் பறிக்கப்பட்ட காய்கறிகளும் பழங்களும் அனுப்பிவைக்கப்பட்டன.

எனினும், செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்லத் திட்டமிடும் ஆராய்ச்சியாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கவுள்ளனர்.

அவர்கள் மூவாண்டுகள் வரை பயணம் மேற்கொள்ளவேண்டும். இதன்காரணமாக முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட உணவைத் தொடர்ந்து உண்டால், ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காது.

இதன்காரணமாக சூரிய வெளிச்சமின்றி, மண்ணின்றி ஒரு தோட்டத்தை அமைப்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக ஆராய்ந்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.