கிரிக்கெற் ஓரு போதையா??

விளையாட்டு உன்னதமானது என்பதை  நான் அறிவேன்.விளையாட்டு மனிதனைப் புதுப்பிக்கின்றது. என்பதில் ஆனந்த மடைகிறேன்.விளையாடும் போது வியர்வை சிந்துகின்றது ,ஆனால் வீரியம் பெறுகின்றது.

வயிறு குறைகிறது.
ஆனால் 
வலிமை நிறைகிறது .
களைப்பு அதிகரிக்கிறது.
ஆதலால் நிறைந்த தூக்கம் நிறைகிறது.
இவை யாவற்றையும் விட ஒரு குழு மனநிலை தோன்றுகின்றது
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
சிறுவயதில் எங்கையோ ஆடுமேய்க்கும் சிறுவர்கள் தூரத்தில் நிற்கும் ஆடை கலைப்பதற்கு பனம் மட்டையோ வேறு மட்டைகளாலோ சிறு கல்லை அடித்து வீசுவார்களாம் அது பின்னாளில் கிறிக்கெற்றாக மாறியதென அறிந்த ஞாபகமுண்டு
அவ்வாறு பாமரனிடமிருந்து வளார்ந்த கிறிக்கெற் இன்று பெரும்புள்ளிகளையும் ஈர்த்து உலகத்தை ஒரு குடையின் கீழ் வைத்திருப்பது ஆய்வுக் குரியதே
விளையாட்டிலிருந்தும் உடலுறவிலிருந்தும் கலைகள் தோன்றியுள்ளதென சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.
உண்மைதான் விளையாட்டு அத்தகைய மகிமை வாய்ந்தது நாடகத்திலும் பல அரங்க விளையாட்டுக்கள் உண்டு சமூக விரோதிகளையும் றௌடிசங்களையும் வன்முறைகளையும் தடுப்பதற்கான ஆழகிய ரசனைக் குழந்தை விளையாட்டு என்பேன்.
ஆனால் வாழ்க்கையே விளையாட்டாகப் போகுமளவுக்கு போதையேறக் கூடாது.
சிலரைப் பார்த்தால் எந்த நேரமும் கிறிக்கெற் புராணமும் சாத்திரம் சொல்லலுமாகக் காணப்படும்.
இது ஒரு சமூக நோய்
சிக்மண்ட் பிறைட் என்ற உளவியலின் தந்தை கூறுகின்றார் ஒரு மனிதனின் அசாதாரண நிலையே மனநோய் என அதாவது எந்த நேரமும் சிரித்தல் அல்லது அழல் அல்லது கோபப்படல் போன்றன மனநிலையின் அறிகுறி அல்லது வெளிப்பாடு
இந்த நிலையில்தான் இன்று பலரும் கிறிக்கெற் போதையில் அந்த சமூக மயப்படுத்தப் பட்ட நோயிலுள்ளனரோ என ஐயங்கொள்ளத் தோன்றுகிறது.
இன்று ஒரு ஆவணப் பையை பேரூந்து நிலையத்தில் விட்டுச் சென்று விட்டாள் ஒரு பெண் அதைக் கண்டெடுத்துக் கொடுக்கச் சென்று அருகிலளைத்தேன்.
அவள் தன்னுடைய வெளிநாட்டிலிருக்கும் மாமாவுடன் நடுவீதியில் பேருந்து வருவதும் தெரியாது தொலைபேசியில் கிறிக்ற் புள்ளிவிபரங்களை அடுக்கிக் கொண்டிருக்கிறாள்.
அவளுக்குத் தெரியாது விபத்துக்குள்ளாகினால் மாமாவோ கிறிக்ற் பிளையரோ வராரென
அவளுக்குத் தெரியாது.பேருந்திலேறினால் பணமின்றித் தேடுவாள்.
அந் நேரம் தன்மாமாவோ கிறிக்கெற் பிளையரோ தராரென பேசிய படி அதைக் கொடுத்து கடந்து சென்றேன். உணவகமொன்றிற்கு அங்கே முதலாளியும் தொழிலாளிகளும் மேலும் சிலரும் ரீவிக்குள் தலையை ஓட்டுவது போல் அதையே பார்த்து மொய்த்துக் கொண்டிருந்தனர்.
முதலாளி கடையை மறந்தபடியிருக்க பூனையொன்று சாப்பாட்டுக்குள் நுளைந்தது நான் நினைத்தேன் புலி நுழைந்தாலும் இவர்களுக்குத் தெரியாதுவென அவ்வளவுக்கு கிறிக்கெற் மோதல் உண்ணவந்த கர்ப்பிணிப் பெண்ணொருத்தி நீண்ட நேரம் காத்திருந்தாள்.
அதற்குள் சண்டை வந்து விட்டது இந்தியாவா சிறீலங்காவா அவுஸ்திரேலியாவா என
அதிலிருந்த வொருதன் போத்திலையும் எடுத்தான்.
மிகுதி வேண்டாம் நிற்க கடந்த வருடம் ஒரு முன்னாள்ப் போராளியுடன் கிறிக்கெற் பற்றி உரையாடியிருந்தேன்.
அப்போது அவர் கூறினார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே கிறிக்கெற் மச் சூடுபிடித்தது தலைவருடன் இருந்த சிலர் சொற்ப நேரம் அதைப் பார்க்க கிடைத்தது பெரும்பாலானோர் சிறீலங்கா தோற்கணுமெனக் கோசமெழுப்பினர்.தலைவர் ஏனெனக் கேட்டார்.அவர்கள் கூறினர் சிறீலங்கா எமது எதிரியென அப்போது தலைவர் சொன்னார் அதைவிடப் பெரிய எதிரி இந்தியாவென அப்போது போராளிகளுக்கு விளங்கவில்லை.
ஆனால் தலைவரின் தீர்க்க தரிசனத்தைப் பார்த்தீர்களா?? இப்போது அனைவருக்கும் தெரிந்துவிட்டதல்லவா இந்தியாதான் எம்மை அழித்ததென
சரி அதற்கும் விளையாட்டுக்கும் என்ன தொடர்பு என சிலர் யோசிக்கலாம்
தொடர்பு இருக்கு
இந்திய அணிக்காக ஒருவன் போத்திலெடுப்பதும்.
கிறிக்ற்றிற்காக ஒரு பெண் விபத்துக் குள்ளாவதும்.
கிறிக்ற்றீக்காக ஒரு பெண் காக்க வைக்கப்பட்டிருப்பதும்.
கிறிக்கெற்றுக்கா சமூக வலைத்தளங்களில் புலம்பிப் புராணம் பாடி சாத்திரம் பார்ப்பதும்
ஒரு நீண்ட நெடிய பன்னெடுங்காலம் போராடி வரும் ஒரு இனத்தின் இருப்பையும் எழுச்சியையும் அழித்துவிடும்.
ஆதலால் விளையாடுவோம் ரசிப்போம்.
போதையேறாமல் பார்ர்த்தபடி
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.