மூதூர் பிரதேசத்தில் பாட்டாளிபுர நீலாக்கேணி தமிழ் மக்களின் நிலைமை!!📷
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் பாட்டாளிபுர நீலாக்கேணி தமிழ் மக்களின் நிலைமையை பார்க்கும் போது வேதனையில் மனம் மூழ்கி போகின்றது.உடுக்க நல்ல ஆடை இல்லாது விட்டால் கூட பறவாயில்லை. உண்ண சிறந்த உணவு இல்லாது போனால்கூட பறவாயில்லை. ஆனால் நிம்மதியாக படுத்து உறங்க வீடு ஓரளவு என்றாலும் சீர் இல்லாது போனால் என்ன தான் செய்வது.
இருக்கும் A/C சரியாக வேலை செய்யிது இல்லை என அதனை புதுப்பிக்க முண்டியடிப்போர் எத்தனை பேர்.
நல்ல வீடுகளையே அடித்து உடைத்து அதனை மீண்டும் அளவுக்கு மீறிய உல்லாச பங்களாவாக கட்டுவோர் எத்தனை பேர்.!!!
நேரத்துக்கு நேரம் வர்ணங்களை வீட்டிற்கு மாற்றி மாற்றி பணத்தை வீணடிக்கும் கூட்டங்கள் எண்ணற்றவை.!!
அரசியல் வாதிகளுக்கு ஒருபோதும் இவர்கள் நிலை தெரிய வராது. சும்மா தேர்தல் காலங்களில் வாக்குகளை அள்ளி வீச தான் அவர்கள் வீரர்கள்.
அன்பானவர்களே!! இத் துயர நிலைமை இந்த மக்களை விட்டு மாற தங்களால் இயன்ற உதவியை வழங்க அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு
T. Jejeevan
Belgium








.jpeg
)





கருத்துகள் இல்லை