யாழில் ஒரு நூல் நிலையத்தின் மிகவும் பரிதாப நிலை!!📷

யாழ் குருநகர் பிரதேசத்தில் யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஒரு நூல் நிலையத்தின் மிகவும் பரிதாபமாக நிலையை பாருங்கள் மக்களே......
இவர்களின் கவனத்திற்கு

1,குறித்த வட்டார உறுப்பினர் ( 22வது வட்டாரம்)
2, யாழ் மாநகர சபை முதல்வர்
3, யாழ் மாநகர சபை ஆணையாளர்.
மேற் குறித்த நூல் நிலையம் யாழ்ப்பாணத்தில் அழிக்கப்பட்ட எமது பெரிய நூல் நிலையம் புனரமைக்க படமால் இருந்த போது பலரின் தேவைகளுக்கு பயன்பட்ட நூல் நிலையம் . இந்த நூல் நிலையம் மிகவும் சிறப்பான பல நூல்களை இப்போதும் கொண்டுள்ளது. இந்த நூல் நிலையத்தை பலர் ஆங்கில நூல்களுக்கு ஆக விசேடமாக தேடிவருவதாகவும் பல அரிய நூல்கள் இங்கு இருப்பதாகவும் குறிப்பிட்ட பிரதேச சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார். இப்படிபட்ட ஒரு நூல் நிலையம் பற்றி குறித்த ஊர் மக்களினால் பல தடவைகள் யாழ் மாநகர சபை நிறுவகத்தினருக்கும் யாழ் மாநகர சபை முதல்வர் அவர்களுக்கும் எடுத்து கூறியபோதும் இவை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் கவலைதெரிவித்தார்கள் . ஒரு சமுதாயத்துக்கு மிகவும் முக்கியமான நூல் நிலையத்தை இப்படி பாழடைய வழி செய்து விட்டு யாழ் மாநகர சபை முதல்வர் மற்றும் கம்பரெலிய கூட்டமைப்பு என்ன தான் செய்கின்றார்கள் என மக்கள் இன்று எம்மிடம் கேட்டார்கள் இதன் முக்கியத்துவத்தை யாழ் மாநகர முதல்வர் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்றும் குறித்த ஆசிரியர் கவலைவெளியிட்டார் . இவைகளை புனரமைத்து எமது வருங்கால சந்ததியினர் தமது அறிவை வளர்த்துக் கொள்ள உதவாமல் 5G தொழில்நுட்பத்தை எமது நகருக்கு அறிமுகப்படுத்தி எமது வருங்கால சந்ததியினரை அழிப்பதற்கு முதல்வர் விருப்புகின்றார எனவும் மக்கள் இன்று விசனம் தொரிவித்தனார்கள். மக்களே இந்த நூல் நிலையத்தில் கஞ்சா பவித்ததற்கான பல தடயங்கள் இருக்கின்றது மற்றும் பல சமூக சீர்கேடுகள் நடைபெறுவதையும் அவதனிக்க கூடியதாக இருந்தது இதனை யாழ் மாநகர சபை உடனே கவனத்தில் எடுத்து சீர் செய்யப்பட வேண்டும் என்று ஊர் மக்களினால் எமக்கு தொரிவிக்கப்பட்டது .1 1/2 வருடங்களுக்கு மேலாக குறித்த நூல் நிலையம் இதே நிலையில் இருப்பதாகவும் இது தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் திரு .ஜெயசீலன் அவர்களினால் பல முறை குறித்த விடையம் யாழ் மாநகர சபை முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் நடவடிக்கை எடுக்கபடவில்லை என்று கூறினார் யாழ் மாநகர சபை உறுப்பினர் திரு.ஜெயசீலன் அவர்கள் ஆகவே குறித்த செய்தி உரியவர்களை சென்றடையும் வரை பகிரவும் .
உரிமையுடன்
கனகசபை விஷ்ணுகாந்

No comments

Powered by Blogger.