சிறுபான்மையினராக மாறுவர் சிங்கள மக்கள்- எஸ்.பி. திஸநாயக்க !!

அடைக்கலம் என்ற போர்வையில் நாட்டுக்குள் வரும் முஸ்லிம் மக்களைத் தடுக்காவிட்டால் சிங்கள மக்கள் சிறுபான்மையாகும் அபாயம் ஏற்படுமென நாடா ளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸநாயக்க தெரிவித்துள்ளார்.


பொரளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே எஸ்.பி. திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

நாட்டில் தற்போது மாறிவரும் இன, மத அடிப்படையிலான மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவ டிக்கை மேற்கொள்ளவேண்டும். இல்லாவிடின் 2050 ஆம் ஆண்டினை நாம் அடையும்போது சிங்கள பெளத்தர்கள் சிறுபான்மையாகும் நிலைமை ஏற்படும். பெளத்த, இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் இந்த பூமியில் மதங்களின் விகிதாசாரத்தை பாதுகாத்துக்கொள்வது அத்தியாவசியமாகும்.

மேலும் தற்போதைய இனவிகிதாசாரத்தின் பிரகாரம் பெளத்தர் சுமார் 74.9 வீதமும் இலங்கை தமிழர் 11.2வீதமும் இந்திய தமிழர் 4.2வீதமும் இலங்கை முஸ்லிம்கள் 9.3 வீதமும் வேறு இனத் தவர்கள் தசம் 5வீதமானவர்களும் உள் ளனர். இந்த விகிதாசாரத்தை இவ்வாறே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இவ் விடயத்தில் அனைத்து அரசியல் கட் சிகளும் அவதானம் செலுத்த வேண்டும்” என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.