அப்பாவி இளைஞர்களிடம் கோடி கோடியாக சுருட்டிய ரஜினி!!

இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய மோசடியாளர் பற்றி பலர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ள சம்பவமானது கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரின்ஸ் டானியல். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கரிஷ்மா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் இணைந்து "கைடண்ஸ் ஜாப் ஸொல்யூஷன்ஸ்" (Guidance Job Solutions) என்ற நிறுவனத்தை தொடங்கினர். மலேசியா சிங்கப்பூர் மற்றும் பல்வேறு ஐரோப்பா நாடுகளில் கண்டிப்பாக வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்தனர்.
வேலைவாய்ப்பு திண்டாட்டம் ஆக உள்ள நிலையில் இந்த நிறுவனத்தை நம்பி பல்வேறு இளைஞர்கள் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை பணத்தை கட்டியுள்ளனர். பணத்தைப் பெற்றுக்கொண்ட பிரண்ட்ஸ் அதன்பிறகு வேலையைப் பற்றிய எந்த ஒரு தகவலையும் அவர்களுக்கு தெரிவிக்கவில்லை.

பணத்தை கட்டிய இளைஞர்கள் அவரிடம் முறையிட்டபோது கட்டிய, நீங்கள் கட்டிய பணத்தை முன்பணமாக கட்டி விட்டேன் என்று கூறியிருக்கிறார். தான் ரஜினி ரசிகர் மன்றத்தில் சேர்ந்தவர் என்பதால் அரசியல் செல்வாக்கு அதிகமாக உள்ளது என்று கூறியும் பணத்தை கட்டிய இளைஞர்களை மிரட்டியுள்ளார்.

30-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் கிட்டத்தட்ட ஆறு கோடி ரூபாய் வரை பிரின்ஸ் தம்பதியினர் மோசடி செய்துள்ளனர். 2 மாதங்கள் கழித்து அந்த நிறுவனத்திற்கு சென்றபோது தான் பிரண்ட்ஸ் மற்றும் கரிஷ்மா தலைமறைவாகியுள்ள சம்பவமானது தெரியவந்துள்ளது.
ஏமாற்றம் அடைந்த இளைஞர்கள் முறை காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதாக இளைஞர்களுக்கு நம்பிக்கையில்லை. இதனால் அவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் நிகழ்ந்த அனைத்தையும் கூறி புகார் அளித்துள்ளனர்.

புகாரை பெற்றுக் கொண்ட ஆட்சியர் கண்டிப்பாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். இந்த சம்பவமானது கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.