தடை பல கடந்த சமுத்திரக்கனி!!

மூடர் கூடம் நவீன் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்த கொளஞ்சி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


2015 ஆம் ஆண்டு வெளியான மூடர் கூடம் படத்தின் வெற்றிக்குப் பின், நவீன் தயாரிப்பில் உருவான படம் கொளஞ்சி. சமுத்திரக்கனி, 'அப்பா', 'தொண்டன்' படங்கள் எடுப்பதற்கு முன்பே, அப்பா - மகன் உறவுச் சிக்கலை மையமாக வைத்து உருவான படம் கொளஞ்சி. இயக்குநர் சிம்புதேவனிடம் உதவியாளராக இருந்த தனராம் சரவணன் இயக்கிய படமிது.
மிகக் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் நவீனால் நல்ல விலைக்கு விற்கப்பட்டதாகவும், ஆனால் படத்தை ரிலீஸ் செய்வதற்கு வாங்கிய நிறுவனம் பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ளதால் வெளியிடுவதில் சிக்கலுள்ளது என தகவல்கள் அப்போது வெளியாகின. 2017 ஆம் ஆண்டே வெளியாகவேண்டிய படம் தாமதமானதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. அவ்வப்போது ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வரும், ஆனால் வெளியான சில நாட்களில் படம் பற்றிய எந்த தகவலும் பின்னாட்களில் வராமல் போகவும் செய்தது.
பல முறை ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழு, வரும் ஜூலை 19 ஆம் தேதி கொளஞ்சி வெளியாகவுள்ளது என அதிகாரபூர்வமான போஸ்டர் வெளியிட்டுள்ளது.
சமுத்திரக்கணி, சங்கவி, ராஜாஜி ஆகியோர் நடித்துள்ளனர். நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.