தமிழர்களின் உரிமை எமது நிலம் பிள்ளையாரில் ஆரம்பித்தது தமிழர் திருவிழா!📷

முல்லைத்தீவின் எல்லையோரத்தில், வடக்கு கிழக்கு இதயபூமிகளை குறிவைத்து மேற்கொள்ளப்படும் குடியேற்றத் திட்டங்களில் இறுதியாக சிக்கியுள்ள தமிழர்களின் பாரம்பரிய நிலமே இந்த பகுதி.
பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில், அதிகாரத்தரப்புக்களின் பின்னணியில் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை பௌத்த வழிபாட்டிடமாக மாற்றும் முயற்சி பல வருடமாக மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிராக சமூகமட்டத்தில் பிரதேச மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ் அரசியல் தரப்புக்கள் இந்த போராட்டத்தை இதுவரை தலைமையேற்காத நிலைமையில், அந்த பகுதி மக்களின் தொடர் முயற்சி, தமிழர்களாக ஒன்றுபடும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது. இதன் வெளிப்பாடாக இன்றைய பொங்கல் விழா நடந்து வருகிறது.

No comments

Powered by Blogger.