ஷான் மார்ஷ் நீக்கம்!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்த முறை ஒவ்வொரு அணிக்கும் பெரும் பிரச்சினையாக அமைந்திருப்பது காயம் காரணமாக வீரர்கள் வெளியேறுவதுதான்.


புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. தென்னாப்பிரிக்காவுடன் ஒரு லீக் ஆட்டத்தில் அந்த அணி ஆடவுள்ளது. அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்து இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை இந்திய அணி பெறும்.

முதலிடத்தைப் பெறும் அணி நான்காம் இடத்தில் அணியுடன் அரையிறுதியில் ஆடவேண்டிவரும். நல்ல பார்மில் உள்ள ஆஸ்திரேலிய அணி கோப்பையை வெல்லும் முனைப்பில் ஆடிவருகிறது. அந்த அணி லீக் போட்டிகளில் இந்தியாவுடன் மட்டுமே தோல்வியைச் சந்தித்துள்ளது.

தற்போது அந்த அணியில் இடது கை பேட்ஸ்மேனான ஷான் மார்ஷ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது பேட் கம்மின்ஸ் வீசிய பந்து கையை பலமாக தாக்கியது.

இதனால் உடனடியாக மருத்துவசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில் அவரது கையில் முறிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் உடனடியாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கிளென் மேக்ஸ்வெல்லும் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.