சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தும் நாவற்குழி இளைஞர்கள் வழக்கு!!

நாவற்குழியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் சார்பில் ஆட்கொணர்வு மனு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளான கு.குருபரன் மற்றும் எஸ்.சுபாசினி ஆகியோரை நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து புலனாய்வு பிரிவினர் ஒளிப்படம் எடுத்துள்ளனர்.


சட்டத்தரணிகள் ஓய்வறைக்கு முன்பாக சட்டத்தரணிகள் உரையாடிக் கொண்டிருந்தபோது, இராணுவ புலனாய்வாளர்கள் கைத்தொலைபேசியில் அவர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தினர்.

இதை அவதானித்த குருபரன், உதவிக்கு ஆட்களை அழைத்து புலனாய்வாளர்களை விரட்டிச் சென்றபோது, அவர்கள் வாகனமொன்றில் ஏறி தப்பிச் சென்றனர்.

மேலதிக மன்றாடியார் அதிபதி சொய்த்திய குணசேகர பயணித்த சட்டமா அதிபர் திணைக்களத்தின் வாகனத்தில் ஏறி அவர்கள் தப்பி சென்றதாகவும், இது தொடர்பாக சட்டமா அதிபரிடம் முறையிடவுள்ளதாகவும் குருபரன் தெரிவித்தார்.

அதேவேளை கடந்த வருடம் குறித்த வழக்கு தொடர்பிலான விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளை புகைப்படம் பிடித்தும் அவர்களை அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளர்கள் நடந்து கொண்டனர்.

அது தொடர்பாக நீதிபதியின் கவனத்திற்கு சட்டத்தரணிகள் கொண்டு சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் குறித்த ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுக்காது தள்ளுபடி செய்ய வேண்டும். என கோரி நீண்ட கால தாமதத்திற்கு பின்னர் வழக்கு தொடரப்பட்டு உள்ளமை உள்ளிட்ட காரணங்களை மேலதிக மன்றாடியார் அதிபதி முன்வைத்தார்.

அது தொடர்பான வழக்கு விசாரணைகளே யாழ்.மேல் நீதிமன்றில் ஒன்றரை வருடங்களுக்கு மேல் நடைபெற்றன. இந்தநிலையில் அண்மையில் குறித்த வழக்கு தொடர்பில் விசாரணைகளை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று முன்னெடுக்க யாழ்.மேல் நீதிமன்று கட்டளையிட்டது.

அதேவேளை குறித்த வழக்கினை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் விசாரிப்பதற்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய கட்டளையைத் தள்ளுபடி செய்யக் கோரும் சட்ட மா அதிபரின் மேன்முறையீட்டு சிறப்பு அனுமதி மனுவை இடைக்காலக் கட்டளையின்றி உயர் நீதிமன்றம். கடந்த செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.