மட்டக்களப்பு ராஜபுரம் கிராமத்தில் குழாய் கிணறு வாழ்வாதார உதவி!!📷

ஜீவஊற்றின்அன்பின்கரம் அறம் அறக்கட்டளை ஊடாக நேற்றைய தினம் (31.07.2019) மட்டக்களப்பு மாவட்டத்தின் ராஜபுரம் கிராமத்தை சேர்ந்த மக்களின் பாவனைக்கென்று குழாய் கிணறு ஒன்று வழங்கப்பட்டது.


குறித்த கிராமத்தை சேர்ந்த மக்கள் தண்ணீரை பெறுவதில் பெரும் சிக்கலை எதிர்நோக்கி இருந்தனர். பாரிய அசௌகரியங்களை எதிர் கொண்ட இக் கிராமத்தினரை ஜீவ ஊற்று அன்பின் கரம் அடையாளங் கண்டு துரிதமாக செயற்பட்டு  தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளது.

இதை போன்று ஏற்கனவே இரண்டு கிணறுகள் வேறு இடங்களில் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த உதவியானது நெதர்லாந்து தேசத்தில் உள்ள சுவிஷேச தரிசன சபையின் தலைமை போதகர் சாமுவேல் குடும்பத்தினரால் வழங்கப்பட்டிருந்தது.

இத்திட்டங்களை செவ்வையாய் ஒழுங்கமைத்து செயற்படுத்திய குழுவினருக்கும் உதவியை நல்கிய உள்ளத்திற்கும் ஜீவ ஊற்று அன்பின் கரம் சார்பாக மனப்பூர்வமான நன்றிகளை தெரிவிப்பதுடன் எமது  மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் சகோதரன் பிலிப் அவர்களுக்கும் விஷேட நன்றிகளை தெரிவிக்கின்றோம்.

நிர்வாகம். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.