பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு!!
யாழ். மாவட்டத்தில் உள்ள 1253 உள்வாரி பட்டதாரிகளுக்கான நியமணக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நியமனங்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் வழங்கிவைத்தனர்.
வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு வவுனியாவிலும் இடம்பெற்றது. வவுனியா மாவட்டத்தில் நீண்டகாலமாக பட்டப்படிப்பை முடித்தும் வேலைவாய்ப்பின்றி இருந்த 159 பேருக்கு நிரந்தர நியமன கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது.
அக்கடிதங்கள் இன்று (வியாழக்கிழமை) வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். கனீபா தலைமையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். கனீபா மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் கா.உதயராசா, வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், சாந்தி சிறீஸ்கந்தராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் 141 பட்டதாரிகளிற்கும் நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்ட நிகழ்வொன்றில் குறித்த பட்டதாரிகளில் 40 பேர் ஏற்கனவே அவர்களுக்கான நியமங்களை பெற்றுக்கொண்ட நிலையில், இன்று 101 பட்டதாரிகளிற்கு நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கிளிநொச்சி தொழில் பயிற்கி வளாக மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கலந்துகொண்டு பட்டதாரிகளிற்கு நியமன கடிதங்களை வழங்கி வைத்தார்.
இதேவேளை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் 153 பட்டதாரிகளிற்கு நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் கப்பல்த்துறை பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹரூப், ஐக்கிய தேசியகட்சியின் நாடாளுமன்ற உருப்பினர் சந்தீப் சமரசிங்ஹ, மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார மற்றும் பல அரச அதிகாரிகள் பங்கேற்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை