விமானத்தில் இருந்து விழுந்து கேம்பிரிட்ஜ் பல்கலை மாணவி உயிரிழப்பு!!

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவி ஒருவர் விமானத்தில் இருந்து விழுந்து உயிரிழந்ததார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பக்கிங்ஹம்ஷையர், மில்ரன் கீன்ஸைச் சேர்ந்த அலானா கட்லன்ட் (வயது 19) கடந்த ஜூலை மாதம் மடகஸ்கரில் சிறிய விமானமொன்றில் பயணித்தபோது விமானத்தின் கதவைத்திறந்து கீழே விழுந்து இறந்தார் என்பதை வெளியுறவு அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த விமானத்தின் கதவை அலானா கட்லன்ட் ஏன் திறந்தார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று மடகஸ்கர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் மலேரியா எதிர்ப்பு மருந்துகளை உட்கொண்டதனால் கடுமையான விளைவுகளைச் சந்தித்திருக்கலாம் என்ற கோணத்திலும் ஆராயப்பட்டுள்ளது. எனினும் அவரது மரணத்திற்கான காரணம் பிரித்தானிய அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை.

வடக்கு மடகஸ்கரில் உள்ள விமானத்தளத்தில் இருந்து புறப்பட்ட உடனேயே அலானா விமானத்தின் கதவைத் திறந்துவிட்டார் என்று மடகஸ்கர், பொலிஸ் கேர்னல் ஜாபிசம்பற்ரா ரவோவி (Jafisambatra Ravoavy) பிபிசிக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ரொபின்சன் கல்லூரியில் இயற்கை விஞ்ஞானத்துறையில் படித்த அலானா கட்லன்ட், மடகஸ்கர் தீவில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே உயிரிழந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

அலானாவின் உடலைத் தேடுவதற்கு பொலிஸார் ஹெலிஹொப்டர் மற்றும் தரை அணிகளைப் பயன்படுத்திவருகின்றனர்.

பிரகாசமான ஒரு எதிர்காலத்தினைக் கொண்ட தமது மகளின் மரணத்தினால் தாம் மனமுடைந்துபோயுள்ளதாக அலானாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.