தொழிலதிபர் வி.ஜி.சித்தார்த்தாவின் உடற்கூறாய்வு முடிவுகள்!!
கேபே கொஃபி டே நிறுவன உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தாவின் உடற்கூறாய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அவரது மரணத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், கேபே கொஃபி டே நிறுவனருமான தொழிலதிபர் வி.ஜி.சித்தார்த்தா, மங்களுருவில் கடந்த திங்கட்கிழமை காணாமல் போனார்.
அதனைத் தொடர்ந்து நீண்ட தேடுதல் பணிகளுக்கு பின்னர் நேத்ராவதி ஆற்றிலிருந்து சித்தார்த்தாவின் உடல் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
சித்தார்த்தா தற்கொலை செய்து கொள்ளப்போவது போன்று கடிதம் எழுதி வைத்திருந்தாலும், அவரது மரணம் குறித்து சில சந்தேகங்கள் எழுந்தன.
இந்நிலையில் சித்தார்த்தாவின் உடலை உடற்கூராய்வு செய்த மங்களூருவிலுள்ள வென்லாக் மாவட்ட வைத்தியசாலை உடற்கூராய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் சித்தார்த்தாவின் நுரையீரலில் இருந்த தண்ணீர், நீரில் மூழ்கியதால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதை உறுதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சித்தார்த்தாவின் தற்கொலையில் எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லை என்பது தெளிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை