நாளை, நாட்டின் பல பாகங்களிலும் பொதுக்கூட்டம்!!


ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் நாட்டின் பல பாகங்களிலும் நாளை காலை 10 மணிக்கு பொதுக்கூட்டங்களை நடத்தவுள்ளதாக தெரிவிகபட்டுள்ளது.


வேலைவாய்ப்பை பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இந்த பொதுக்கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில் தமது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கப்பெறாவிடின் விரைவில் மாபெரும் பேரணியொன்றை கொழும்பில் நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தினால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்ட போதிலும் அவற்றில் குறைபாடுகள் காணப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அரசாங்கம் வேலையில்லா பட்டதாரிகளில் குறிப்பிட்ட அளவிலான பட்டதாரிகளுக்கு நியமனங்களின் போது உள்வாரி ,வெளிவாரி பட்டதாரிகள் என பாகுபாடு காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் , அனைவருக்கும் பொதுவான முறையில் நியமனங்களை வழங்குமாறும் , தகுந்த தீர்மானங்கள் எடுக்கப்படாவிட்டால் விரைவில் கொழும்பில் மாபெரும் எதிர்ப்பு பேரணியை நடத்தவுள்ளதாகவும், ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பானர் தன்னே ஞானானனந்த தேரர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.