தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வார்த்தைகளின் வர்ணிப்புக்கு அப்பாற்பட்டவர்-மெலனி திசநாயக்கா!!
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வார்த்தைகளின் வர்ணிப்புக்கு அப்பாற்பட்டவர் என சட்டத்தரணி மெலனி திசநாயக்கா தெரிவித்துள்ளார்.
தான் ஒரு சிங்களக்குடிமகளாக இலங்கையரசு எங்களிற்கு அளித்த பொய்யான கருத்துருவாக்கங்களால் விடுதலைப்புலி அங்கத்துவர்களை கொடுமையான பயங்கரவாதிகள் என்றே நம்புவது வழமை எனவும் அவர் கூறியுள்ளார்.
ஏன் விடுதலைப்புலிகள் அவர்களது இறுதி முயற்சியாக ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் ? ஏன் தமிழ் இளைஞர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ளவும் அவர்களது சொந்த உரிமைக்காக யுத்தம் செய்வதையும் தேர்ந்தெடுத்தார்கள்?
அவர்களது தியாகங்களும் அற்பணிப்புகளும் வார்த்தைகளுக்கு அப்பாலானவை. அவர்கள் தங்கள் சொந்த மக்களுக்களின் விடுதலைக்காக தங்கள் முழு வாழ்வையும் உவந்தளித்தவர்கள் எனவும் சட்டத்தரணி மெலனி திசநாயக்கா தெரிவித்துள்ளார். .
நேர்த்தியான ஒழுக்கக் கட்டுப்பாட்டைப் பேணியவர்கள் விடுதலைப்புலிகள். இது போன்ற நல்ல கட்டுக்கோப்பான இராணுவத்தினையோ அல்லது அமைப்பினையோ பற்றி நான் ஒருபோதும் பார்த்தோ அல்லது கேட்டோ அறிந்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனப்பிரச்சனை விவகாரத்துக்கு ஒரு போரில்லாத முடிவைப் பெறுவதற்கு உண்மையான நம்பிக்கையுடன் சமாதானப் பேச்சுக்களில் விடுதலைப்புலிகள் நுழைந்தபோது , இலங்கையரசாங்கம் குறிப்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமாதானப் பேச்சுக்களை விடுதலைப்புலிகளுக்கு வைக்கப்படும் ஒரு பொறியாக வடிவமைத்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
விடுதலைப்புலிகளது பலத்தையும் விடுதலைப்புலி வீரர்களது மனோபலத்தையும் சிதைப்பதற்கு மிகவும் வஞ்சகத்தனமும் தந்திரமும் கொண்ட பொறியாக அது வடிவமைக்கப்பட்டதாகவும்,ஆரம்பத்தில் சமாதானம் சீராகச் சென்றுகொண்டிருந்தாலும் சிறிலங்கா அரசின் கோழைத்தனமான யுத்தநிறுத்த மீறல்களால் படிப்படியாக சமாதானம் சீர்குலையத்தொடங்கியதால் , ஆச்சீர்குலைவுகளே மீண்டும் ஒரு யுத்தத்திற்கு வழிகோலியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையரசாங்கம் ஒரு லட்சத்து நாற்பதினாயிரத்துக்கும் அதிகமான தமிழ்மக்களைக் கொன்று ஒரு இரத்தம் தோய்ந்த முடிவையே போரின் மூலம் வழங்கியதாகவும், வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த பல விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஈவிரக்கமற்று கொல்லப்பட்டார்கள். ஏனையவர்கள் சித்திரவதைகளுக்கும் பாலியல் வல்லுறவகளுக்கும் ஆளானார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்மக்கள் அவர்களது சொந்த உரிமைக்காகவும் சொந்த சுதந்திரத்துக்காகவும் போரிட்டார்கள் என்றும், விடுதலைப்புலிகளே தமிழ் மக்களது ஒரேயொரு பிரதிநிதிகளாகவும் இருந்தார்களே தவிர பயங்கரவாதிகளாக அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்மக்கள் சிங்கள மக்களைப் போலவே சுதந்திரத்துடன் கூடிய அமைதியான வாழ்க்கையை வாழ்வதற்கு நிறையவே உரிமை பெற்றிருக்கிறார்கள் எனவும், அவர்கள் எல்லா வழிகளிலும் சிங்களமக்களுக்கு சமமானவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் எந்தவொரு உண்மையான பௌத்தனோ அல்லது , நல்ல சிங்களக்குடிமகனோ இன அழிப்பைச் செய்த கடந்தகால தற்கால இலங்கை அரசுடன் ஒருபோதும் ஒத்துப்போகப் போவதில்லை எனவும் சட்டத்தரணி மெலனி திசநாயக்கா தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை