கடற்கரையில் பாரிய பாறை வீழுந்து 3 பேர் உயிரிழப்பு!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிரபல்யமான கடற்கரையில் செங்குத்தான பாரிய பாறை இடிந்து வீழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.


கிராண்ட்வியூ சர்ப் கடற்கரைக்கு அருகே இன்று (சனிக்கிழமை) மாலை 3 மணியளவில் 25 முதல் 30 அடி கொண்ட குறித்த பாறை மணல் மீது வீழ்ந்துள்ளது.

பாறை வீழ்ந்த இடத்தைச் சுற்றி கடற்கரை நாற்காலிகள் மற்றும் குடைகள் இருந்தமை காணொளிகள் தெரியவந்துள்ளது. குறித்த நாற்காலிகளில் இருந்தவர்களே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் நேற்றும் பாறை ஒன்று இடிந்து வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.