யாழில் வாள்வெட்டு- இருவர் வைத்தியசாலையில்!!

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை சந்தியில் சற்றுமுன்னர் வாள்வெட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 22 மற்றும் 24 வயதுகளையுடைய இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஒருவர் குருநகர் வைத்தியசாலையிலும், மற்றைய இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.