மெக்ஸிகோவில் எரிவாயுக்கசிவு!!

மெக்ஸிகோவில் ஏற்பட்டுள்ள எரிவாயுக்கசிவு காரணமாக இரண்டாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மெக்ஸிகோ சிட்டிக்கு வடக்குப் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தின் வழியாக எரிவாயு குழாய் செல்கிறது. இந்தநிலையில் அப்பகுதியில் திடீரென வாயு கசியத் தொடங்கியது.

திடீரென ஏற்பட்ட வாயுக் கசிவிலிருந்து பெரிய அளவில் வாயு வெளியேறியது. அது காற்றின் மூலம் பரவி சுற்றிலுமுள்ள வயல்வெளிகள் குடியிருப்புகளுக்கும் பரவியது.

நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதைகளில் 150 மீட்டர் நீளத்திற்கு வாயுக் கசிவின் புகைமூட்டம் இருந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அபாயகரமான இந்த வாயுக் கசிவினால் பாதிக்கப்படாமல் இருக்க, உள்ளூர் மக்கள் இரண்டாயிரம் பேர் பாதுகாப்பு அதிகாரிகளால் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

வயல்களில் பரவியிருந்த எரிவாயுவால் தீப்பிடிக்காமல் இருப்பதற்காக அவசரகால மீட்புப் பணியாளர்கள் தண்ணீர் ஊற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வாயுக் கசிவு சம்பவத்திற்கு எரிபொருள் திருடர்கள் சிலர் சட்டவிரோதமாக எரிவாயுவை திருட முயற்சித்தமையே காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.