பிரிந்து வாழப்போவதாக அறிவித்தார் நடிகைதியா!

தமிழில் ‘என் சுவாச காற்றே’ திரைப்படத்தில் நடித்த நடிகை தியா மிர்சா, தனது கணவரை பிரிந்து வாழப்போவதாக அறிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில், ’11 ஆண்டுகள் கழித்து தானும், கணவருமான சாகில் சங்காவும் பிரிவது என்று ஒருமனதாக தீர்மானித்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.

பிரிந்துவிட்டாலும் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம். இது குறித்து நாங்கள் மேலும் எதுவும் தெரிவிக்கமாட்டோம் என்றும் கூறியுள்ளார். தியாமிர்சா ஹிந்தியில் நல்ல நடிகை என்று பெயர் எடுத்தவர்.

தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகம் பேசாத தியா கணவரை பிரிவதாக அறிவித்தது திரையுலக பிரபலங்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அரவிந்த்சாமி நடித்த ‘என் சுவாச காற்றே’ படத்தில் நடனகலைஞராக திரையுலக பயணத்தை ஆரம்பித்த இவர், தொழிலதிபர் சாகிலை திருமணம் செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.