அகதிகள் 75 பேர் நடுக்கடலில் மீட்பு!

லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கில் சென்ற அகதிகள் 75 பேர் நடுக்கடலில் வைத்து கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.


லிபியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்டதன் பின்னர் அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. போராளிக் குழுக்களின் மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்களிடமிருந்து தப்பித்து உயிரை பாதுகாத்துகொள்ள லிபியாவில் வாழும் மக்கள் பலர் ஜேர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி சட்ட விரோதமாக கடலில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.

இதன்காரணமாக லிபிய கடற்படையினர் கடல் எல்லைகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயன்ற 75 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள மீட்புக்குழு அதிகாரி ஒருவர், ‘லிபியாவின் ஜூவ்வாரா நகரில் இருந்து 120 கி.மீ தொலைவில் மத்திய தரைக்கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கில் படகுகளில் சென்ற 75 அகதிகள் உள்நாட்டு கடற்படையினரால் நடுக்கடலில் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும், சீரான மற்றும் சாதகமான வானிலை காரணமாக கடலில் பயணிக்கும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது’ என குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.