ரயிலில் மோதி வயோதிபர் உயிரிழப்பு!

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே ரயிலில் மோதி வயோதிபவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த விபத்து தலவாக்கலை ரயில் நிலையத்திற்கு அண்மையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலை ஒலிரூட் பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.எம்.சந்திரசேன (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மரண விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரனைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.