யானைகள் அட்டகாசம் - தவிக்கும் விவசாயிகள்!!
வவுனியாவில் கடும் வறட்சியான காலநிலை நிலவுவதால் காட்டு யானைகள் குடியிருப்புக்களுக்குள் நுழைந்து விவசாய நிலங்களையும் பயன்தரும் மரங்களையும் சேதப்படுத்துகின்றதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதனால் முற்றுமுழுதாக நம்பிவாழும் விவசாயத்தை குடும்பங்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக வவுனியா கனகராயன்குளம் கிராமசேவகர் பிரிவுக்குற்பட்ட பெரியகுளம் கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளின் பிரதான வாழ்வாதாரமாகக் தென்னை பயிற்செய்கை காணப்படுகின்றது.
இந் நிலையில் நேற்று நள்ளிரவு மக்கள் குடியிருப்புக்களுக்குள் புகுந்த காட்டுயானைக் கூட்டம் ஒன்று சுமார் 75 தொடக்கம் 80 வரையான நிறை காயுடன் காணப்பட்ட தென்னை மரங்களையும் 15ற்கும் மேற்பட்ட வாழைமரங்களையும், நூறு அடிக்கு மேற்பட்ட மரவள்ளி மரங்களையும் சேதப்படுத்தியுள்ளன.
சுமார் 7 வருடங்களாக கிணற்றிலிருந்து நீர்பாய்ச்சி பராமரித்து வந்த தென்னம் பிள்ளைகள் பயன்தரும் காலத்தில் யானைகளால் சேதப்படுத்தப்பட்டமையில் தமது வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் தொடர்ச்சியாக காட்டு யானைகளில் தொல்லையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு விவசாய அழிவு நிவாரணம் மற்றும் யானைக்கான மின்சார வேலி அமைத்து வழங்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் தமிழ் மக்களைப் பிரதிநித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகளும் கவனம் செலுத்தவேண்டுமெனபாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை