என் பயணம்... கவிதை!!

இசையை மீட்டாத
மூங்கில்கள் போல
தாகம் தீர்க்காத
கானல் நீர் போல
குட்டிகள் தள்ளாத
வாழையைப் போல
பொக்கை வாய் கிழவியின்
பாடல்கள் போல
போகிறது என் பயணம்.


எப்போது மாறுமோ...?

மெல்லிய இசையால்
மனக்கவலை தீர்த்து
நாவறண்ட விலங்குகளுக்கு
நன்னீராகி
ஏழையின் கரையல் சோற்றினில்
வாழைப்பழமாய் மிதந்து
பொக்கை வாயாலும் புரியும் பாடல் ஒன்று வடித்து
பிறப்பின் பலனை - சிறு
புள்ளியாவது
நாளைய சந்ததிக்கு காட்டிடவே
தொடர்கிறது ...
இன்றும் என் பயணம்..........................

காரையன் (கதன்)
காரைதீவு.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.