ஹொங் கொங்கில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்!!
ஹொங் கொங்கிற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக விமான நிலையத்தை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பத்தாவது வார தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களைக் குறிக்கும் தொடர் ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஜனநாயக சார்பு ஆர்வலர்கள் குறித்த விமான நிலையத்தை முற்றுகையிட்டு மூன்றாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
விமான நிலையத்தின் பிரதான மண்டபத்தில் கூடி “13 மாவட்டங்களில் கிடைக்கும் கண்ணீர் வாயுவை நீங்கள் சாப்பிடலாம்” என பலவேறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் பதாதைகளை வைத்திருந்ததுடன் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான ஆர்ப்பாட்டங்களின் காரணங்களையும் கோரிக்கைகளையும் விளக்கும் துண்டு பிரசுரங்களையும் வழங்கியிருந்தனர்.
தினமும் 1,100 பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் வரும் ஹொங் கொங்கின் விமான நிலையம் உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாகும். இதேவேளை நகரத்தில் இருந்து சுமார் 200 சர்வதேச இடங்களுக்கு இடையில் விமான சேவைகள் ஈடுபடுத்தப்படுகின்றது.
மேலும் இந்த தொடர் போராட்டங்களினால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக விமான சேவைகள், ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாரின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை