கனாக்கண்டேன்......!!!
முற்றத்தில்
முதிா்ந்த மரம்
முன்னோா்கள் வச்ச மரம்
முன்னூறு ஆண்டாகியும்
முறியாத மூப்பு மரம்.
அம்மி பறக்கின்ற
ஆடி பேய் காத்திலும்
அரை சாண் அசைவு கூட
அசையாது நிமிர்ந்த மரம்...
பாறைகள் பறந்து விழும்
பறட்டை காத்திலும்
குறட்டை விட்டு
தூங்கிய மரம்.....
கல்லணையே கலங்கி போகும்
கடுங் காத்திலும்
கலங்காம காத்த மரம்.
சித்தன்ன வாசல் சிலைகள்
சிதைந்து போகும்
சில்லாட்டை காத்திலும்
சிறு இலை கூட உதிராமல்
உறுதி காத்த மரம்.
புழுதி பறக்கா
பூங்காத்து மோதி
பொசுக்கென்று
சாய்ந்து விழ கனா கண்டேன்.....
பல்லியில் பலரகம்
பலராவும் பாா்த்திருக்கேன்.
பார்க்காத ஒரு ரகம்....
பாா்த்துபுட்டேன் நள்ளிரவு ஒரு தேரம்.
முள்ளு முளைச்சப் பல்லி
முகம் கூராய் நீண்டப் பல்லி
முழி ரெண்டும் பிதுங்கும் பல்லி
முறையற்று நாக்கு நீண்டப் பல்லி
முனைவால் ஒடிஞ்சப் பல்லி
ஓணான் வடிவ கோரப் பல்லி
வீட்ட சுத்தி கெளலி சத்தம்
வீடதிரும் குதா்க்க சத்தம்....
என் காதில் கேட்கும் அவல சத்தம்
அலறி ஓடி ஒரிடத்தில் இறந்து விழ
கனா கண்டேன்......
தூக்கி விழித்து
முகம் அலம்புகையில்
முன் வரிசை முத்துப்பல்
மூன்றிலொன்று முறிந்து விழ
கனா கண்டேன்
முற்றத்தில் மேய்ந்த கோழி
தீடிரென சிறகடித்து சிறகடித்து
சிறு மூச்சி அடங்க
கனா கண்டேன்.....
சிங்காரமாய் விளைஞ்சி நின்னு
அறுவடைக்கு காத்திருந்த
நெல்லு வயலொன்று
குப்பென்று தீபிடித்து
பொசுங்கி போக கனாகண்டேன்
மணம் மணக்கும்
மல்லிகை தோட்டமொன்று
பிணம் மணக்கும்
மயான காடாய் மாற கனா கண்டேன்
தொழுவத்துல மேச்சலுக்கு
போய்ட்டு வந்த மாடு
அப்பன் கட்டி அரைமணி நேரத்தில
அரை லூசாகி
" ம்மா" என்ற அலறல் சத்தத்துடன்
மண் சாய கனா கண்டேன்
பால் வடியும்
பசு காம்பில்
நஞ்சு வடிய கனா கண்டேன்......
ஊர் தெரு சுற்றி வந்து
என் வீடு வாசல் வருகையில
சாம குடுகுடுப்பைக்காரன்
தெறித்து ஒட கனா கண்டேன்.......
ஆதலால்........
இன்றொருநாள்
பள்ளிக்கு வேண்டாம் பாவி மகளே....!
ஆலைக்கு வேண்டாம் அன்பு கணவா.......!
முற்றம் தாண்டாதே மூத்தவனே.....
முச்சந்தி போகாத நடுளவளே....
குத்தவச்சி தொலைக்கப் போறா மூத்தவளே..!
*******************************
சுயம்பு
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
முதிா்ந்த மரம்
முன்னோா்கள் வச்ச மரம்
முன்னூறு ஆண்டாகியும்
முறியாத மூப்பு மரம்.
அம்மி பறக்கின்ற
ஆடி பேய் காத்திலும்
அரை சாண் அசைவு கூட
அசையாது நிமிர்ந்த மரம்...
பாறைகள் பறந்து விழும்
பறட்டை காத்திலும்
குறட்டை விட்டு
தூங்கிய மரம்.....
கல்லணையே கலங்கி போகும்
கடுங் காத்திலும்
கலங்காம காத்த மரம்.
சித்தன்ன வாசல் சிலைகள்
சிதைந்து போகும்
சில்லாட்டை காத்திலும்
சிறு இலை கூட உதிராமல்
உறுதி காத்த மரம்.
புழுதி பறக்கா
பூங்காத்து மோதி
பொசுக்கென்று
சாய்ந்து விழ கனா கண்டேன்.....
பல்லியில் பலரகம்
பலராவும் பாா்த்திருக்கேன்.
பார்க்காத ஒரு ரகம்....
பாா்த்துபுட்டேன் நள்ளிரவு ஒரு தேரம்.
முள்ளு முளைச்சப் பல்லி
முகம் கூராய் நீண்டப் பல்லி
முழி ரெண்டும் பிதுங்கும் பல்லி
முறையற்று நாக்கு நீண்டப் பல்லி
முனைவால் ஒடிஞ்சப் பல்லி
ஓணான் வடிவ கோரப் பல்லி
வீட்ட சுத்தி கெளலி சத்தம்
வீடதிரும் குதா்க்க சத்தம்....
என் காதில் கேட்கும் அவல சத்தம்
அலறி ஓடி ஒரிடத்தில் இறந்து விழ
கனா கண்டேன்......
தூக்கி விழித்து
முகம் அலம்புகையில்
முன் வரிசை முத்துப்பல்
மூன்றிலொன்று முறிந்து விழ
கனா கண்டேன்
முற்றத்தில் மேய்ந்த கோழி
தீடிரென சிறகடித்து சிறகடித்து
சிறு மூச்சி அடங்க
கனா கண்டேன்.....
சிங்காரமாய் விளைஞ்சி நின்னு
அறுவடைக்கு காத்திருந்த
நெல்லு வயலொன்று
குப்பென்று தீபிடித்து
பொசுங்கி போக கனாகண்டேன்
மணம் மணக்கும்
மல்லிகை தோட்டமொன்று
பிணம் மணக்கும்
மயான காடாய் மாற கனா கண்டேன்
தொழுவத்துல மேச்சலுக்கு
போய்ட்டு வந்த மாடு
அப்பன் கட்டி அரைமணி நேரத்தில
அரை லூசாகி
" ம்மா" என்ற அலறல் சத்தத்துடன்
மண் சாய கனா கண்டேன்
பால் வடியும்
பசு காம்பில்
நஞ்சு வடிய கனா கண்டேன்......
ஊர் தெரு சுற்றி வந்து
என் வீடு வாசல் வருகையில
சாம குடுகுடுப்பைக்காரன்
தெறித்து ஒட கனா கண்டேன்.......
ஆதலால்........
இன்றொருநாள்
பள்ளிக்கு வேண்டாம் பாவி மகளே....!
ஆலைக்கு வேண்டாம் அன்பு கணவா.......!
முற்றம் தாண்டாதே மூத்தவனே.....
முச்சந்தி போகாத நடுளவளே....
குத்தவச்சி தொலைக்கப் போறா மூத்தவளே..!
*******************************
சுயம்பு
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை