ஆரையம்பதி தாமரைப்பொய்கை அம்மனின் திருச்சடங்கு விழா!

கிழக்கு இலங்கையின் மிகவும் பழமைவாய்ந்த அம்மன் ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் ஆரையம்பதி தாமரைப்பொய்கை அருள்மிகு ஸ்ரீவீரமாகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.


குறித்த நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

இதன்போது விசேட பூஜைகள் நடைபெற்றதுடன், அடியார்கள் பொங்கல் பொங்கி வழிப்பாடுகளில் ஈடுபட்டனர். அத்துடன், பிரதமபூசகர் கோ.பத்மசீலன் தலைமையில் ஆலய கதவு திறக்கப்பட்டது.

இதேவேளை எட்டு தினங்கள் நடைபெறவுள்ள இந்த திருச்சடங்கில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மடைப்பெட்டி எடுக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளதுடன் புதன்கிழமை மாலை வீரகம்பம் வெட்டும் நிகழ்வும் வியாழக்கிழமை அதிகாலை தீமிதிப்பு உற்சவமும் நடைபெறவுள்ளது.

சுமார் 300 வருடத்திற்கு முந்திய வரலாற்றினைக்கொண்ட தாமரைப்பொய்கை அருள்மிகு ஸ்ரீவீரமாகாளி அம்மன் ஆலயத்தின் திருச்சடங்கானது கிழக்கு தமிழர்களின் பாரம்பரியத்திற்கு இணைவாக நடாத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.