விடுமுறையும் ஊரும்..!!

வருத்தம் என்றாலும்
சம்பளத்தை
வெட்டி போடுவார்
முதலாளி
என்று ஓய்வெடுக்காமல்
ஓடி ஓடி குளிரிலும்
வெக்கையிலும்
உழைத்து

வயிற்றை காச்சி
வாயை கட்டி
சமைத்ததும் சமைக்காத
நாளுமாய்
மாதத்தில்
பணத்தை மிச்சப்படுத்தி
சீட்டை கட்டி

வீட்டுக்கடன்
தண்ணிகாசு
கரண்ட் காசு
எல்லாம் கட்டி
முடிய

சந்தை கலையிற
நேரமாய்
ஓடிப்போய்
மிஞ்சின மீன்
வாடின சலாட்
கொட்டிற
மரக்கறியெல்லாம்
பத்து யூரோக்களுக்குள்
வேண்டி
ஒரே சமையலில்
ஒரு வாரத்தை
கடத்தி

நாலு தடவை காசு
தருவதாக கூறி
விமான ரிக்கற்றை
நாலு மாதம் முதலே
ரிசேவ் பண்ணி

சீட்டையும் எடுத்து
போதாக்குறைக்கு
வட்டிக்கு
பணத்தையும்
எடுத்து

மலிவுக்கடை
உடுப்பு, சொக்கோலா
சந்தையில் விற்கும்
வாசனை திரவியம்
ஒரு பத்து போத்தல்
வாங்கி பெட்டியில்
போட்டுகட்டி

விமானத்தில் ஏறினால்
அது குறைஞ்ச விலை
ரிக்கற்
பத்து மணித்தியாலம்
ராண்சிற்றாம்
சவுதியில் கொண்டுவந்து
நிப்பாட்டி விட்டான்

காயிறம் கிடந்து

தொடரும்.....

No comments

Powered by Blogger.