கலை ஒன்றை நேசிப்பது என்பது எங்கள் சமூகங்களில் மிக மிகச் சவாலானது!!

உங்களுக்குப் பிடித்தாமான கலை ஒன்றை நேசிப்பது என்பது எங்கள் சமூகங்களில் மிக மிகச் சவாலானது. ஆனால் அத்தனையையும் எதிர் கொண்டு பயணிப்பவனை அதுவும் நேசிக்கத் தவறுவதில்லை.



Rishi Selvam சில வாரங்களுக்கு முன்னர் phone பண்ணி ”எனக்கு Asian Film Academy இல் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கண்ணா. இன்னும் உத்தியோகபூர்வமா அறிவிக்காததால வெளீல சொல்லேல்லை அதுக்கு கொடுத்த 3 படங்களில் உங்களின் வெடி மணியமும் இடியன் துவக்கும் ஒன்று அதில் வேலை செய்ய சந்தர்ப்பம் கிடைத்ததுக்கு நன்றி” என்றார்.

மிகவும் சந்தோசப்பட்டேன் காரணம் அக்குறும்படத்துக்காக அவர் எடுத்துக் கொண்ட  உழைப்புத் தான். ...
இலங்கையில் இந்த வருடம் அவருக்குத் தான் கிடைத்துள்ளது என்பதை விட Ilango Ram க்குப் பிறகு இச் சந்தர்ப்பம் கிடைக்கும் ஒரே ஒரு தமிழருமாவார்.

வெடி மணியமும் இடியன் துவக்கும் குறும்படத்திற்கு எடுக்கப்பட்ட காட்டுப்புற தளங்கள் அனுமதி மறுக்கப்பட்ட இடங்கள் என்பதை விட கையில் அனுமதி பெறாத துவக்கு வேறு இருந்தது. அதனால் உதவிக்கு பெரிய ஆளணி போக முடியாது பெரிய தொழில்நுட்பக் கருவிகளும் பயன்படுத்த முடியாது. அத்தனை பேருக்கும் நிலைப்பாட்டைச் சொன்னேன். காரணம் படத்தின் நிறச் சேர்க்கை முதலே தெரிவு செய்யப்பட்டதால் அக்குளம் தான் கதைக்கு மிகப் பொருத்தமாகவும் இருந்தது.

முதல் நாள் படப்பிடிப்புக்கு அதிகாலை செல்லும் போது குளத்தில் ஒருவர் தற்கொலை செய்திருந்த உடலுடன் சிக்குப்பட்டு விட்டோம் (அது பெரிய கதை பிறிதொரு நாள் பேசலாம்) உடனேயே தளத்தைக் காலி பண்ணி விட்டு சிவநகர் குளத்துக்குப் போனாலும் நான் எதிர் பார்த்த அமைப்பு அங்கு இல்லை.

இறப்புத் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் முடியும் வரை காத்திருந்து மீளச் செல்கிறோம். அங்கு போய் பயந்தபடி இருந்தால் வேலை செய்ய முடியாது இத்தனைக்கும் அதில் முக்கிய பாத்திரமாக மருமகனான சங்கர் வேறு இருந்தான் அதனால் எல்லோரும் பயமின்றி இயங்க வேண்டும் எல்லாம் ஆயத்தமாகி போகையில் கூழவடிச் சந்தியில் ரிசியின் உந்துருளி விபத்துக்குள்ளாகி ரிசிக்கு பயங்கர உரோஞ்சல் காயங்கள்.

முதலுதவி கொடுத்தாலும் அந்த எரிவுடன் இயங்க முடியாது நான் சொன்னேன் போயிட்டு 2 நாள் விட்டு வருவோம் என்றாலும் ரிசி சம்மதிக்கவில்லை. காரணம் அத்தனை நாளிலும் ரிசி என்னை முழுதாக உள்வாங்கியிருந்ததால் ரிசிக்கும் தெரியும் என்ன நடந்தாலும் நான் பின் வாங்கமாட்டன். மற்றவரும் ரிசியால் ஏலாது போயிட்டு பிறகு வரும் எனும் போது இல்லை என்னால் ஏலும் எடுக்கலாம் என்று அன்று படம் பிடித்துக் கொடுத்த காட்சிகள் அனைத்தும் படத்தின் மிக மிக தத்ரூபமான காட்சிகளாகும்.

ஒரு கதையை முழுதாக உள்வாங்கி அவர் கமரா செய்ததால் படத்தின் ஒவ்வொரு சட்டகமும் ஒரு அழகான புகைப்படத் தொகுப்பாகவே இருந்தது.

நான் ரசிக்கும் ஒருவருக்கு கிடைத்துள்ள இச்சந்தர்ப்பம் எனக்கு மட்டுமல்ல எமது ஈழ சினிமாவுக்கே ஒரு வரப்பிரசாதம் தான்.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.