கோட் சூட் போட்டவன் எல்லாம் ஜெண்டில்மேன்னா? உயர்நீதி மன்றம் வரை சென்றால் நிரபராதி ஆகிவிட முடியுமா?

இந்த வழக்கின் தீர்ப்பு “வடமாகாணசபை அமைச்சர் ஒருவரை பதவி நீக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு கிடையாது” என உயர்நீதிமன்றம் தீர்பளித்ததில் இருந்து இந்த வழக்கு எந்த வகையில் தொடர்புபட்டிருக்கும் என்பது யாவருக்கும் புரியும். எனவே ஒரு ஊழல் மோசடிக்குற்றவாளியை நீதித்துறை காப்பாற்றியுள்ளது அல்லது தப்பிக்கவிட்டுள்ளது.
ஒரு குற்றவாளியை பிடிக்க, தண்டிக்க முயன்று தோற்ற முன்னாள் முதலமைச்சரை இகழ்ந்தும் தப்பிய, தப்பிக்க விடப்பட்ட ஒரு குற்றவாளியை புகழும் ஒரு இனத்தின் பிரஜையாக நான் இருப்பது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.
முப்பது வருட யுத்தத்திற்கு முகம்கொடுத்து அழிந்து சின்னபின்னப்பட்டு துன்பப்படும் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஊழல் செய்த ஒருவருக்கு எம் தேசத்தின் நீதிமன்றம் இன்றுவரை நிலைத்து இருந்திந்தால் என்ன தண்டனை வழங்கியிருக்கும் !!!????? உடல் இரண்டு மணித்தியாலங்கள்தான் அவன் வீட்டில் வைத்திருக்க அனுமதியளித்திருக்கும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு எந்தளவு அரசியல் உள்நோக்கம் கொண்டது. உற்றவாளியின் குற்றம் பற்றி எதனையும் கருத்தில் எடுக்காமல் குற்றத்தை விடுத்து குற்றவாளியை பதவிநீக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை என சட்டநுணுக்கத்தை கையாண்டு தீர்ப்பளித்ததன் மூலம் மாகாணசபையை யானை தின்றவிழாம்பழமாக்கிவிட்டனர்.
மாகாணசபையில் சம்பளம் பெறும் திறந்தவெளி கைதிகளை உட்காரவைக்கும் சிங்கள அரசியல் சாசனத்தின் சித்துவிளையாட்டை அதன் சூக்குமங்களை புரிந்தும் புரியாதவர் போன்று டமிழ் அரசியல்தலைமைகள் குந்தியிருக்க , இது புரியாமல் கம்புசுத்திஆளுக்கால் தம் அறிவுக்கெட்டுயவாறு பரிகாசிப்பு தூ சீ நாய்களே அடுத்த வருடம் உந்த மாகாணசபைக் கதிரையில் உங்கட வீரபுருசர்களை அமரவைக்க என்ன அலப்பறை எல்லாம் பண்ணி காட்டுகத்து கத்துவீங்க?? நீங்க என்னடா ஜென்மங்கள்?
துசாந் நடேசலிங்கம்.
கருத்துகள் இல்லை