வரலாற்று கடமையிலிருந்து தள்ளி நிற்கவோ அல்லது பின்நிற்கவோ முடியாது!!

தமிழ்த்தேசிய தள அரசியலில் பயணிப்பவர்களாகிய நாங்கள்
என்னதான் உள் முரண்பாடுகளோ அல்லது மனக்கசப்புகளோ  இருந்தாலும் அதையெல்லாம் உதறித்தள்ளி விட்டு இனத்தின்
உரிமை சார்ந்து நிற்க வேண்டியதும் அது சார்ந்து நிற்பவர்களுக்கு துணையாக நிற்கவேண்டியதும் வரலாற்று கடைமையாகின்றது.


இந்த வரலாற்று கடமையிலிருந்து தள்ளி நிற்கவோ அல்லது பின்நிற்கவோ முடியாது அப்படி தள்ளி நின்றாலோ அல்லது பின்நின்றாலோ இனத்தின் எதிர்காலத்தை குழிதோண்டி புதைக்கும் செயற்பாட்டுக்கு துணையாகிவிடுவோம் என்ற அச்சமான கள யதார்த்தத்தை உணர்ந்துள்ளோம்.

ஆகவே எமக்குள் ஏற்பட்ட சிறு கருத்து முறண்பாட்டை தூர நோக்கு சிந்தனையோடு அணுகி சாதகமாக தீர்த்து கொண்டு
மீண்டும் தமிழ்த்தேசிய அரசியலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினராக தொடர்ந்து உறுதியாகவும் உண்மையாகவும் பயணிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளேன்.


போராடித்தான் வாழ வேண்டும்
ஆனால் அப்போராட்டம் யாரோடு என்பதில் தெளிவு வேண்டும்.

சிவலிங்கம் சிவசுதன்No comments

Powered by Blogger.